கடலூர்:
சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு, 11-ம் தேதி மாலை முதல், வாக்குப் பதிவு நடைபெறும் 13-ம் தேதி வரை மதுக்கடைகள் மூடப்பட்டு இருக்கும் என்று கடலூர் மாவட்ட ஆட்சியர் பெ.சீதாராமன் அறிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சட்டப் பேரவைத் தேர்தல் நியாயமாகவும், நேர்மையாகவும் நடைபெற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதையொட்டி மதுபானக் கடைகள் அனைத்தையும், 11-ம் தேதி மாலை 5 மணி முதல், 13-ம் தேதி மாலை 5 மணி வரையும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மே 13-ம் தேதியும் மூடிவிட தமிழக அரசு உத்தரவிட்டு இருக்கிறது.
இதனால், டாஸ்மாக் நிறுவனம் மூலம் நடத்தப்படும் சில்லறை மதுபானக் கடைகள், ஹோட்டல்களில் உள்ள மது அருந்தும் கூடங்கள் அனைத்தும், மேற்கண்ட தேதிகளில் மூடப்பட்டு இருக்கும். இந்த நாள்களில் மதுபானக் கடைகளும், மது அருந்தும் கூடங்களும் ஹோட்டல்களில் உள்ள மது அருந்தும் கூடங்களும் மூடப்பட்டு இருப்பதை டாஸ்மாக் மேற்பார்வையாளர்கள், ஹோட்டல் உரிமையாளர்கள் உறுதி செய்யவேண்டும்.
இந்த உத்தரவை மீறி மதுபானக் கடைகள், மது அருந்தும் கூடங்கள் மற்றும் ஹோட்டலில் மது அருந்தும் பார்களை திறந்து வைத்து இருந்தாலோ, அவற்றில் மது விற்பனை நடைபெற்றாலோ, கடை மேற்பார்வையாளர்கள், ஹோட்டல், பார் உரிமையாளார்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக