சிதம்பரம்:
சிதம்பரம் சட்டப்பேரவைத் தொகுதியில் ஏப்ரல் 4 மற்றும் 5 தேதிகளில் அனைவருக்கும் பூத்சிலிப் வழங்கப்படும் என தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி தெரிவித்தார்.
இது குறித்து தொகுதி தேர்தல் அலுவலரும், கோட்டாட்சியருமான எம்.இந்துமதி தெரிவித்தது:
அந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வீடு, வீடாகச் சென்று வாக்காளர்களுக்கான பூத்சிலிப்பை வழங்குவர். மேற்கண்ட தினங்களில் வாக்காளர்களின் வீட்டிலிருந்து தவறாமல் பூத் சிலிப்பை பெற்றுகொள்ள வேண்டும். மேலும் ஏப்ரல் 1,5,8 தேதிகளில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வரவு-செலவு கணக்கு ஆய்வு செய்யப்படுகிறது. தேர்தல் பார்வையாளர் ஜி.எம்.கேமை ஆய்வு மேற்கொள்கிறார். வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு 2-ம் கட்ட பயிற்சி வருகிற ஏப்ரல் 3-ம் தேதி நடைபெறுகிறது என கோட்டாட்சியர் எம்.இந்துமதி தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக