கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்கிறார், மத்திய அமைச்சர் நெப்போலியன்.
கடலூர்:
முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் முதல்வர் கருணாநிதி நிறைவேற்றிய நல்ல திட்டங்களை, அடுத்து வந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில், ரத்து செய்தவர் ஜெயலலிதா என்று, மத்திய அமைச்சர் நெப்போலியன் கூறினார்.
கடலூர் தி.மு.க. வேட்பாளர் இள.புகழேந்தியை ஆதரித்து கடலூர் மஞ்சக்குப்பம், திருப்பாப்புலியூர், கூத்தப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் நெப்போலியன் பேசியது:
நாட்டுக்கு யார் வேணடும்?, மக்களுக்கு நன்மை செய்ய யார் வரவேண்டும்? என்று சிந்தித்து வாக்களியுங்கள். நீண்டகாலம் தி.மு.க.வில் கட்சிப் பணியாற்றி வருபவர் புகழேந்தி. கடந்த முறை அவருக்கு கடலூர் தொகுதியில் வாய்ப்பளிக்க வில்லை என்பதற்காக, அவர் எதிர்ச் செயல்களில் ஈடுபடவில்லை. 5 ஆண்டுகளும் அவர் கட்சிக்காக கடுமையாக உழைத்தார். மீண்டும் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு உள்ளது.2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் ஜெயலலிதா உருப்படியான திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை.
மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சி என்பது, முந்தைய ஆட்சி காலத்தில் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களைத் தொடர வேண்டும்.ஆனால் முந்தைய தி.மு.க. ஆட்சி காலத்தில் கருணாநிதியால் நிறைவேற்றப்பட்ட நல்ல திட்டங்களை எல்லாம் ரத்து செய்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சி கொத்தடிமை ஆட்சி. அவரது ஆட்சியில் நான் எம்.எல்.ஏ. யாக இருந்தேன். சட்டப்பேரவையில் எனக்கு மைக் வைத்தார்கள். ஆனால் மைக்கில் பேசுவதற்கு இணைப்பு கொடுக்கவே இல்லை.அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளிடையே ஒற்றுமை இல்லை.
ஆளுக்கு ஒரு திசையில் சென்று கொண்டு இருக்கிறார்கள் என்றார் நெப்போலியன். பிரசாரத்தில் நகராட்சித் தலைவர் து.தங்கராசு, முன்னாள் நகராட்சித் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், அ.தி.மு.க. இளைஞரணி நகரச் செயலர் கே.எஸ்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக