உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 19, 2011

கடலூர் மாவட்டத்தில் 430 பேர் "49-ஓ"முறையில் ஓட்டுப்பதிவு

கடலூர் : 

             சட்டசபை தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் 430 பேர் 49"ஓ'வை பயன்படுத்தியுள்ளனர்.

              ஒவ்வொரு குடிமகனும் தங்களது ஜனநாயக கடமையாற்ற வேண்டும். அதற்காக தேர்தலில் கட்டாயம் ஒட்டளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தேர்தல் ஆணையம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தது. அனைவரும் ஓட்டு போடுவதன் மூலம் கள்ள ஓட்டு தடுக்கப்படுவதோடு, உண்மையான ஜனநாயகம் தழைத்தோங்கும் எனவும், எந்த வேட்பாளருக்கும் ஓட்டு போட விருப்பமில்லை என்றாலும் கூட ஓட்டுச் சாவடிக்குச் சென்று "49-ஓ' முறையில் தங்கள் பெயரை உரிய பதிவேட்டில் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தி வருகிறது.
 
           இதன் காரணமாக கடந்த 13ம் தேதி நடந்த பொதுத் தேர்தலில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 24 ஆயிரத்து 824 பேர் "49-ஓ' முறையை பயன்படுத்தியுள்ளனர். 

அதன்படி கடலூர் மாவட்டத்தில் 

திட்டக்குடியில் 43, 
விருத்தாசலம் 88, 
பண்ருட்டி 83, 
கடலூர் 103, 
குறிஞ்சிப்பாடி 20, 
புவனகிரி 22, 
சிதம்பரம் 28, 
காட்டுமன்னார்கோவிலில் 43 

பேர் என மொத்தம் 430 பேர் "49-ஓ' முறையை இந்த தேர்தலில் பயன்படுத்தியுள்ளனர்.
 

            கடலூர் மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளில் நெய்வேலி தொகுதியில் மட்டும் எவரும் "49-ஓ'முறையை பயன்படுத்தவில்லை. மாவட்டத்திலேயே குறைந்த வாக்காளர் கொண்ட இத்தொகுதியில் 81.93 சதவீத ஓட்டுகள் பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior