கடலூர்:
சமட்டிக்குப்பத்தில் நடந்த தேர்தல் தகராறில், முக்கிய குற்றவாளிகளை கைது செய்யக் கோரி, வேல்முருகன் எம்.எல்.ஏ., கலெக்டர் சீதாராமன் மற்றும் எஸ்.பி., அஷ்வின் கோட்னீசிடம் மனு கொடுத்துள்ளார்.
மனு விவரம்:
கடலூர் மாவட்டம், நெய்வேலி சட்டசபை தொகுதி பா.ம.க., வேட்பாளராக தி.மு.க., கூட்டணியில் போட்டியிட்டேன். தேர்தல் அன்று சமட்டிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 150 பேர் கொண்ட கும்பல், 15க்கும் மேற்பட்ட வாகனங்களில் வீச்சரிவாள், இரும்பு பைப் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன், நெய்வேலி தொகுதி முழுவதும் உள்ள பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளுக்குச் சென்று பா.ம.க., - தி.மு.க., தோழமை கட்சி பொறுப்பாளர்களை மிரட்டியும், மாம்பழம் சின்னத்திற்கு ஓட்டு போட்டவர்கள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபட்டவர்களுக்கு கொலை மிரட்டலும் விடுத்தனர்.
பின்னர், சமட்டிக்குப்பம் கிராமத்திற்குச் சென்று, அங்குள்ள 55, 56 எண் ஓட்டுச்சாவடிகளில் இருந்த மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களைச் சேதப்படுத்தினர். அந்த கும்பல் என்னையும், எனது சகோதரரர்கள் திருமால்வளவன், கண்ணன் ஆகியோரையும் கொலை செய்யாமல் விடமாட்டோம் என சபதம் செய்துள்ளது. எனவே, மேற்படி கும்பலை கைது செய்யவும், அவர்கள் பயன்படுத்திய வாகனங்களை பறிமுதல் செய்து எனக்கும் எனது சகோதரர்களுக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு, வேல்முருகன் எம்.எல்.ஏ., தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக