உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஏப்ரல் 19, 2011

கடலூர் கடற்கரையில் சித்ரா பவுர்ணமியையொட்டி மக்கள் நிலா சோறு சாப்பிட்டனர்



சித்ரா பவுர்ணமியையொட்டி கடற்கரையில் குவிந்த மக்கள்; 

குடும்பத்துடன் நிலா சோறு சாப்பிட்டனர்
 
கடலூர்:

             சித்திரை மாதம் வரும் பவுர்ணமி சிறப்பு வாய்ந்த ஒன்றாகும். மனிதர்களின் பாவம், புண்ணிய கணக்கினை எழுதும் சித்திர, குப்தன் ஆகியோரின் பிறந்தநாளாகவும் இந்நாள் குறிப்பிடப்படுகிறது. இத்தகைய நாளில் அவரை வழிப்பட்டால் மனிதர்களின் பாவங்கள் நீங்கும் என்பது ஐதீகமாகும். மேலும் இந்நாளில் ஈஷ்வரனுக்கு மரிக்கொழுந்தை கொண்டு அபிஷேகம் செய்தால் நன்மைகிடைக்கும்.
 
                       எனவே இந்நாளை முன்னிட்டு கடலூர் நகரில் உள்ள பெரும்பாலான கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தங்களது வேண்டுதல் நிறைவேறுவதற்காக பால்குடம், மாவிளக்கு, காவடி போன்றவைகளை எடுத்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தியதை காணமுடிந்தது.

               கடலூர் தேவனாம்பட்டினம் கடல் நீர் மட்டத்தில் இருந்து எழும் நிலவினை பார்ப்பதற்காக மாலையில் இருந்தே ஏராளமானவர்கள் தங்களது குடும்பத்துடன் சில்வர் பீச்சுக்கு வந்திருந்தனர். இதனால் நேற்று கடற்கரையில் திருவிழா கூட்டம் போல் மக்கள் கூட்டம் இருந்தது. மேலும் பொதுமக்களோடு கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனும் குடும்பத்துடன் வந்து கலந்து கொண்டார்.

               அவர் கடற்கரை மணலில் அமர்ந்தபடி சித்திரை பவுர்ணமியை கண்டுகளித்தார். சித்ராபவுர்ணமியின் போது கடற்கரையில் அமர்ந்து நிலா சோறு சாப்பிடுவது வழக்கம். எனவே இங்கு வந்தவர்களின் பெரும்பாலானவர்கள் நிலா சோறு சாப்பிடுவதற்காக வீட்டில் இருந்தே தங்களது கையில் இரவு உணவை எடுத்து வந்திருந்தார்கள்.

               இவர்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் கடற்கரையில் ஒன்றாக உட்கார்ந்து நிலவொளியில் உணவினை சாப்பிட்டதை காணமுடிந்தது. கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருந்ததால் இதனை கட்டப்படுத்துவதற்காக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுத்தப் பட்டிருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior