திருவள்ளுவர் பல்கலைக் கழகத்தில் தொலைதூர அஞ்சல் வழி கல்வி திட்டத்தை நடப்பாண்டில் தொடங்குவது என கல்விக் குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக் கழகத்தின் கல்விக்குழு சிறப்புக் கூட்டம் காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. துணை வேந்தர் ஜோதிமுருகன் தலைமை தாங்கினார்.
அதையடுத்து திருவள்ளுவர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் ஜோதிமுருகன் கூறியது:
கூட்டத்தில், நடப்பு கல்வியாண்டிலேயே தொலைதூர அஞ்சல் வழி கல்வித் திட்டத்தை தொடங்க முடிவு எடுக்கப்பட்டது. அதற்குத் தேவையான நெறிமுறைகள், பாடத்திட்டங்கள், தேர்வு முறைகள் குறித்து திட்டமிடப்பட்டது. இத்திட்டத்தின் கீழ் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவ, மாணவியர் பயன்பெறுவர். அத்துடன் பொருளாதாரம், சமூக நிலையில் பின்தங்கிய மாணவர்கள் இத்திட்டத்தின் மூலம் உயர்கல்வி பெறும் வாய்ப்பை பெறுகின்றனர்.
வேலூர் கோட்டையில் ஏற்கெனவே பல்கலைக்கழகம் இயங்கி வந்த இடத்தில் திருவள்ளுவர் பல்கலைக்கழக தொலைதூர கல்வித் திட்டத்தின் தலைமை அலுவலகம் செயல்படும். இதுதவிர 4 மாவட்டங்களிலும் 4 படிப்பு மையங்கள் தொடங்கப்படும். தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மற்றும் மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இக்கல்வித் திட்டத்தின் கீழ் குறிப்பிட்ட சதவீதம் கல்விக் கட்டண சலுகை அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளநிலையில்
பி.ஏ. ஆங்கிலம்,
தமிழ், இலக்கியம்,
வரலாறு,
அரசியல்,
பொருளாதாரம் போன்ற 12 இளநிலை படிப்புகளும்,
எம்.காம்.,
எம்எஸ்சி,
எம்ஏ போன்ற முதுநிலைப் படிப்புகளும்,
7 முதுநிலை சான்றிதழ் படிப்புகளும்,
7 பட்டயப் படிப்புகளும்,
5 சான்றிதழ் படிப்புகளும் முதல்கட்டமாக
தொடங்கப்படும் என்றார்.
இணயத்தள முகவரி
0 கருத்துகள்:
கருத்துரையிடுக