உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 07, 2011

பிளஸ் 2 உடனடி துணை தேர்வு: 9ந் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்

          பிளஸ் 2 தேர்வு முடிவு 9 ந் தேதி வெளியிடப்படுகிறது. இதில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுத 13 ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

          பிளஸ் 2 தேர்வு முடிவுகள் 9ந் தேதி வெளியிடப்படுகிறது. இதில் 3 பாடத்துக்குள் பெயிலாகும் மாணவர்கள் உடனடியாக தேர்வு எழுதி தேர்ச்சி பெறுவதற்கு வசதியாக உடனடி சிறப்பு தேர்வு ஜுன், ஜுலை மாதத்தில் நடத்தப்படவுள்ளது. ஒரு பாடத்துக்கு கட்டணம் ரூ.85. இரண்டு பாடங்களுக்கு கட்டணம் ரூ.135. மூன்று பாடங்களுக்கு கட்டணம் ரூ.185.

           
டந்த மார்ச் மாதம் பள்ளி மாணவராக பிளஸ் 2 தேர்வு எழுதி அதில் மூன்றுக்கும் குறைவான பாடங்களில் தோல்வி அடைந்தால் அவர்கள் எஸ்.எச். விண்ணப்பங்களை அவர்கள் படித்த பள்ளியிலேயே 9 ந் தேதி முதல் 13 ந் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம். பின்னர் அவற்றை பூர்த்தி செய்து அந்தந்த பள்ளியிலேயே மே 13 ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும். தேர்வு கட்டணத்தை பள்ளியிலேயே பணமாக செலுத்தலாம்.

             கடந்த மார்ச் மாதம் பிளஸ் 2 தேர்வு எழுதி தேர்ச்சி பெறாத தனிதேர்வர்களும், அதற்கு முன்பு தேர்வு எழுதி தோல்வியுற்ற தனி தேர்வர்களும் இந்த சிறப்பு துணை தேர்வை எழுதலாம். இவர்கள் அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்கள், முதன்மை கல்வி அலுவலகங்கள், மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகியவற்றில் மே 16 ந் தேதி முதல் 20 ந் தேதி வரை விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.

             பூர்த்தி செய்த விண்ணப்பப்படிவங்களை சம்பந்தப்பட்ட அரசு தேர்வுகள் மண்டல துணை இயக்குனர் அலுவலகத்தில் மே 24 ந் தேதிக்குள் வந்துசேரும் வகையில் பதிவு தபாலிலோ, அல்லது நேரிலோ சமர்ப்பிக்கலாம். விண்ணப்ப படிவத்துடன் மதிப்பெண் சான்றிதழின் நகல், அல்லது இணையதளம் மூலம் பெறப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகலை இணைக்க வேண்டும். தேர்வுகள் ஜுன் 22 ந் தேதி முதல் ஜுலை 2 ந் தேதி வரை நடைபெறும்.

              சென்னை மாவட்ட மாணவர்கள் விடைத்தாள் அச்சுபகர்ப்பு நகல் மற்றும் மறுகூட்டலுக்கான விண்ணப்பங்கள் முதன்மை கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகங்களில் கிடைக்கும். வேறு எங்கும் கொடுக்கப்படாது. பூர்த்தி செய்த விண்ணப்பங்களையும் மேற்கண்ட இடங்களில்தான் கொடுக்க வேண்டும்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior