உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, மே 07, 2011

கல்வியில் பின்தங்கிய 21 மாவட்டத்தில் மாதிரி பள்ளிகள் கட்ட ரூ.132 கோடி மத்திய அரசு ஒதுக்கியுள்ளது

          கல்வியில் பின்தங்கிய 21 மாவட்டங்களில், மாதிரி பள்ளி கட்டடம் கட்ட 132 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.

          தர்மபுரி, கடலூர், கிருஷ்ணகிரி, சிவகங்கை உட்பட 10 மாவட்டங்கள், கல்வியில் பின்தங்கியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளன. இங்கு, மத்திய அரசின் ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில் 18 மாதிரி பள்ளிகள் கடந்த கல்வி ஆண்டில் துவக்கப்பட்டன.இதற்கென 6 முதல் 9, பிளஸ் 1 வகுப்புகள் அருகில் உள்ள பள்ளிகளில் நடக்கின்றன. அடுத்த கல்வி (2011-2012) ஆண்டில் 10, பிளஸ் 2 வகுப்புகள் துவக்கப்படும். இதற்கான வகுப்பறை கட்டடம் கட்ட, பள்ளிக்கு 3 கோடி ரூபாய் வீதம் வழங்கும் திட்டம் தயாரிக்கப்பட்டது.
 
                இதற்கான நிதி 132 கோடி ரூபாயை மத்திய அரசு தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளது. இதில், 54 கோடி ரூபாயில் கடந்த கல்வி ஆண்டில் துவக்கிய 18 பள்ளிகளுக்கு, கட்டடம் கட்டும் பணியை போலீஸ் வீட்டு வசதி கழகத்தினர் துவக்கியுள்ளனர். பத்து மாதத்திற்குள் இப்பணி முடியும். விளையாட்டு மைதானம், ஆய்வக வசதிகள், இணையதள வசதிகள், இலக்கியம், அறிவியல், கணிதம் மன்றங்கள் செயல்படும். 

            இப்பணிகள் முடிந்தபின், 2ம் கட்டமாக அரியலூர், கடலூர், தர்மபுரி, ஈரோடு, திருப்பூர் உட்பட 11 மாவட்டங்களில் 26 மாதிரி பள்ளிகள் துவக்கப்படும். அங்கு, 78 கோடி ரூபாயில் கட்டடங்கள் கட்டப்படும், என கல்வித்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,

               "பின்தங்கிய ஒன்றியங்களில் இப்பள்ளி துவக்கப்படும் பட்சத்தில், கிராமப்புற மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வி கிடைக்கும். இவர்களை கல்வியில் வளர்ச்சி அடைய செய்யும்நோக்கில், இத்திட்டம் செயல்படுகிறது,'' என்றார்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior