நோக்கியா இந்தியா நிறுவனம், ஐந்து ஆண்டுகளில் 50 கோடி மொபைல் போன் சாதனங்களை தயாரித்து, சாதனை படைத்துள்ளது.
சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில், நோக்கியா இந்தியா நிறுவனத்தின் மொபைல் போன் தொழிற்சாலை அமைந்துள்ளது. இத்தொழிற்சாலையில், கடந்த 2006ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் முதல் மொபைல் போன்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2007ம் ஆண்டில், 10 கோடியாக இருந்த மொபைல் போன் சாதனங்கள் தயாரிப்பு, படிப்படியாக அதிகரித்து, தற்போது 50 கோடியை எட்டியுள்ளது. ஐந்து ஆண்டுகளில், படைக்கப்பட்ட இந்த சாதனையை கொண்டாடும் விதமாக, சி 3 என்ற அதிநவீன வசதிகள் கொண்ட மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
நோக்கியா இந்தியா நிறுவனத்தின் செயல் பிரிவு இயக்குனர் பிரகாஷ் கடாமா, புதிய மொபைல் போனை வெளியிட்டு கூறியது:
சென்னைத் தொழிற்சாலையில் இதுவரை, 28.50 கோடி டாலர் (1,311 கோடி ரூபாய்) முதலீடு செய்யப்பட்டுள்ளது. இங்கு, 1,000 முதல் 6,000 ரூபாய்வரை விலை கொண்ட மொபைல் போன்கள் தயாரிக்கப்படுகின்றன. இதையொட்டி 6,074 ரூபாய்விலையில், அதி நவீன வசதிகள் கொண்ட புதிய சி 3 மொபைல் போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிறுவனம் விரைவில் இரண்டு 'சிம்' பொருத்தக் கூடிய மொபைல் போன்களை அறிமுகப்படுத்தவுள்ளது. இவ்வாறு பிரகாஷ் கடாமா கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக