உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 18, 2011

கடலூர் மாவட்டத்தில் வேளாண் கடன் இலக்கு ரூ.1,022 கோடி

கடலூர்:
 
           நடப்பு நிதி ஆண்டில் வேளாண் பணிகளுக்கு கூட்டுறவு வங்கிகள் மூலம் ரூ. 1,022.25 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் வே.அமுதவல்லி தெரிவித்தார்.  

வெள்ளிக்கிழமை நடந்த மாவட்ட விவசாயிகள் குறைகேட்கும் கூட்டத்தில் ஆட்சியர் தெரிவித்த தகவல்கள்: 

               கடலூர் மாவட்ட வேளாண் பணிகளுக்கு இவ்வாண்டு ரூ. 1022.25 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மே மாதம் முடிய 170.31 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. குறுகிய காலக் கடனாக ரூ. 205 கோடியும், மத்திய காலக் கடனாக ரூ. 15 கோடியும் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.  கடலூர் மாவட்டத்தில் சொர்ணவாரி நெல் 10 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிட்டு 7,353 ஹெக்டேரில் சாகுபடி செய்யப்பட்டது. குறுவை 8 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. 

                 சம்பா நெல் 92 ஆயிரம் ஹெக்டேரில் சாகுபடி செய்ய திட்டமிடப்பட்டு இருக்கிறது. செம்மை நெல் சாகுபடி 49,800 ஹெக்டேரில் மேற்கொள்ளப்படவிருக்கிறது. 30 ஆயிரம் ஹெக்டேரில் கரும்பு பயிரிடப்பட்டு உள்ளது.  மாவட்டத்தில் நெல் விதைகள் 798.21 டன், தானிய வகை விதைகள் 0.5 டன், பயறு வகைகள் 105,78 டன், மணிலா விதை 86.95 டன், கையிருப்பு உள்ளது. உரங்கள் தழைச் சத்து 1732 டன், மணிச்சத்து 638 டன், சாம்பல் சத்து 1216 டன், நுண்ணூட்டக் கலவை 6.65 டன், உயிர் உரங்கள் 28,400 பொட்டலங்கள் கையிருப்பு உள்ளன.  மின் வாரியத்தின் மூலம் விவசாயத்துக்கு புதிதாக 127 மின் இணைப்புகள் வழங்கப்பட்டு உள்ளன. 

               நுகர்பொருள் வாணிபக் கழகம் முலம் 25 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்படுகின்றன. 14-6-2011 முடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் சன்ன ரகம் நெல் 79,324 டன்களும், சாதாரண ரகம் நெல் 16,013 டன்களும் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior