திருத்தப்பட்ட தனியார் பள்ளி கல்விக் கட்டணம் வெள்ளிக்கிழமை (ஜூன் 17) இணைய தளத்தில் வெளியிடப்பட்டது.
இதன்படி சென்னை மாவட்டத்தில் எல்.கே.ஜி.-யில் குழந்தையைச் சேர்க்க அதிபட்சமாக ரூ. 24 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு அதிகபட்ச கட்டணமாக ரூ. 25 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சென்னை சீதாபதி நகரில் உள்ள சன்ஷைன் மான்டிசோரி நர்சரி மற்றும் தொடக்கப் பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளுக்கான கட்டணமாக ரூ. 24 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அடுத்தபடியாக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள ஏ.எம்.எம். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் எல்.கே.ஜி. வகுப்புக்கு ரூ. 20,150 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,800 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அண்ணா நகரில் உள்ள எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியில் பிளஸ்-2 வகுப்புக்கு சென்னையிலேயே அதிகபட்சமாக ரூ. 25 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்தப் பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 15,400 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சூளைமேட்டில் உள்ள டி.ஏ.வி. பள்ளியில் எல்.கே.ஜி.-க்கு ரூ. 17,150 கட்டணமும், பிளஸ்-2 வகுப்புக்கு ரூ. 24,100 கட்டணமும் நிர்ணியக்கப்பட்டுள்ளது.
இதுபோல் தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் உள்ள தனியார் பள்ளிகளுக்கான திருத்தப்பட்ட கட்டண விவரம்
இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக