சிதம்பரம்:
பாரத ஸ்டேட் வங்கி சிதம்பரம் கிளை 21-ம் நூற்றாண்டின் சிறப்பம்சமாக வாடிக்கையாளர்களுக்கு காகிதம் இல்லாமல் வங்கியின் செயல்பாடுகளை நடத்திக் கொள்ள ஏதுவாக பசுமை திட்டத்தை அமல்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அவ்வங்கி முதன்மை மேலாளர் லஷ்மி நாராயணன் தெரிவித்தது:
இந்த திட்டத்தின் மூலம் வங்கியின் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி பணம் எடுக்கவும், பணம் டிபாசிட் செய்யவும், பணம் பரிமாற்றம் செய்யவும் முடிவும். மேலும் பண பரிமாற்றத்துக்கு எந்த விதமான உச்சவரம்பும் இல்லாமல், வவுச்சர்களின் அவசியமும் இல்லாமல் இந்த சேவையை பயன்படுத்த முடியும்.
ஆன்லைன் பேங்கிங், மொபைல் வங்கி சேவை முதலானவையும் இந்த கிளையில் வழங்கப்பட்டு வருகின்றன. இந்த முயற்சிகள் மூலம் வங்கியில் வாடிக்கையாளர்களின் நெரிசலை தவிர்க்க முடியும். வாடிக்கையாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட வங்கி சேவையை வழங்கவும் முடியும் என முதன்மை மேலாளர் லஷ்மிநாராயணன் தெரிவித்தார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக