உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 28, 2011

தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் தகவல் தராமல் அலைக்கழிப்பு; அதிகாரிக்கு ரூ.5 ஆயிரம் அபராதம்

நெய்வேலி:
 
             தகவல் அறியும் உரிமை சட்டத்தை மதிக்காமல், மனுதாரருக்கு உரிய தகவலை தராமல் அலைக்கழிப்பு ஏற்படுத்தியதாக குறிஞ்சிப்பாடி பொதுத் தகவல் அதிகாரி பாஸ்கருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.  

              குறிஞ்சிப்பாடி தாலுக்கா கொளக்குடி கிராமத்தைச் சேர்ந்த சி.திருமுருகன் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ், 2010 மார்ச் மாதம் கொளக்குடி ஊராட்சியில் உள்ள அனைத்து நீர்த்தேக்க தொட்டிகளின் இயக்குநர்களின் பெயர்களையும், 2009 மே 22 முதல் 28-ம் தேதிவரை தேசிய ஊரக வேலை உறுதித்திட்டத்தின்கீழ் கொளக்குடி ஊராட்சியில் உள்ள புதுக்குளம் மேம்பாட்டுப் பணியின் என்.எம்.ஆர். நகல் வழங்கும்படி குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.  

             இருமுறை விண்ணப்பித்தும், குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலகத்திலிருந்து பதிலேதும் கிடைக்காததால், திருமுருகன், தமிழ்நாடு தகவல் ஆணையத்திடம் மேல்முறையீடு செய்திருந்தார். இதையடுத்து ஆணையம் மனுதாரர் கேட்டுள்ள தகவல்களை வழங்கும்படி சம்மந்தப்பட்ட பொதுத் தகவல் அலுவலருக்கு கட்டளையிட்டது. ஆணையத்தின் கட்டளையையும் அலுவலர்கள் ஏற்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து மனுதாரர் திருமுருகன், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்.  

             இதையடுத்து மனுதாரர் கேட்ட தகவல்களை வழங்கும் படி 2011 ஏப்ரலில் குறிஞ்சிப்பாடி வட்டார வளர்ச்சி அலுவலருக்கும், உதவி இயக்குநருக்கும் கடிதம் அனுப்பப்பட்டது. இருப்பினும் மனுதாரருக்கு தகவல் அளிக்கப்படாததால், தகவல் ஆணையம் மனுதாரரின் வழக்கை விசாரித்து இந்த அபராத உத்தரவை பிறப்பித்தது.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior