
பூட்டிக் கிடக்கும் ஊரக நூலகக் கட்டடம்.
சிதம்பரம்:
புதிதாக கட்டப்பட்டு பூட்டிக் கிடக்கும் புதிய ஊரக நூலகம் திறக்கப்படுமா என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.
சிதம்பரம் நகரை ஓட்டி அமைந்துள்ளது நான் முனிசிபல் ஊராட்சி. குமராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நான்முனிசிபல் ஊராட்சிப் பகுதியில் உள்ள சிவசக்திநகரில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் (2010-11) ரூ. 30 லட்சம் செலவில் ஊரக நூலகம் அமைக்க புதிய கட்டடம் கட்டப்பட்டது.
கட்டப்பட்டு 6 மாதங்களுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் பூட்டப்பட்ட நிலையிலேயே உள்ளது. பொதுமக்கள் பயன்பாட்டுக்காக இதுபோன்ற அரசு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு பயன்பாடின்றி பூட்டப்பட்ட நிலையில் உள்ளது வேதனையாக உள்ளது என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். எனவே கடலூர் மாவட்ட நிர்வாகம் இந்த ஊரக நூலக கட்டடத்தை திறந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அளிக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக