திட்டக்குடி:
திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்அழகன் திட்டக்குடி பகுதியில் கீழச்செருவாய், இடைச்செருவாய், பாளையம், கொரக்கை, ஏந்தல், தச்சூர் உட்பட 22 கிராமங்களில் வீதிவீதியாக சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அப்போது திட்டக்குடி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் தமிழ்அழகன் பேசியது:-
வெலிங்டன் நீர்தேக்கத்தில் மராமத்து செய்து முழுகொள்ளவு நீர் பிடிப்பதன் முலம் விருத்தாசலம், திட்டக்குடி தாலுக்காவில் பாசன வசதி பெறும் 24 ஆயிரம் ஏக்கரில் முழு பாசன பகுதியும், பாசன வசதி பெற நடவடிக்கை எடுக்கப்படும், பொது மக்கள் 24 மணி நேரமும் என்னை தொடர்பு கொள்ளலாம். அவர்களுக்கு தேவையான உதவிக்கு அழைக்கலாம். நான் இந்த தொகுதியை சேர்ந்தவன் தொகுதியின் நிறை, குறைகள் தெரியும் எனவே குறைகளை களைய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன்
கீழச்செருவாய், பாளையம் பொதுப்பணித்துறை ஏரிகள் முலம் பாசன வசதி பெறும் பகுதிகளில் வேளாண்மை பொறியியல் துறை முலம் சிமெண்ட பாசன வாய்க்கால் கட்டித்தர முறையிடுவேன். வெல்லிங்டன் ஏரியை சுற்றுலா பயணிகள் விரும்பி பார்வையிடும் வகையில் சீரமைக்கப்படும். கொரக்கை, ஏந்தல் வழியாக வரும் ஒடை நீர் அப்பகுதி கிராமங்களை பாதிக்காத வகையில் சீரமைக்கப்படும். இவ்வாறு தமிழ்அழகன் பேசினார்.
இவருடன் ஒன்றிய தேமுதிக செயலாளர் ராஜமாணிக்கம், திட்டக்குடி நகர செயலாளர் கபிலன், அவைத்தலைவர் கனகசபை, பொருளாளர் செல்வகுமார், மாவட்ட நிர்வாகி மணிமாறன், மாவட்ட பிரதிநிதி வேலாயுதம், முன்னாள் விவசாய அணி செயலாளர் சிவராமன், கேப்டன் பேரவை செயலாளர் தங்கதுரை, அதிமுக இணைச்செயலாளர் வெள்ளையம்மாள் கலிய முர்த்தி, அவைத்தலைவர் ராஜகோபால், மாவட்ட கவுன்சிலர் மதியழகன், தொகுதி இணைச் செயலாளர் பொன்முடி, மாணவரணி செயலாளர் எழிலரசன், பாசறை செயலாளர் கோபி உள்பட பலர் சென்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக