"கடலூர் உள்ளிட்ட கிழக்கு கடற்கரையோரம் உள்ள சிறு துறைமுகங்கள் மேம்படுத்தப்படும்' என கவர்னர் உரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கவர்னர் உரையில், "நீண்ட கடற்கரை கொண்ட தமிழகத்தில், துறைமுகங்கள் மேம்பாடு அடைந்தால் அதையொட்டியுள்ள நிலப்பகுதிகளில் வர்த்தகம் மேம்படும். எனவே, கிழக்கு கடற்கரையை ஒட்டி அமைந்துள்ள கடலூர், நாகப்பட்டினம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளின் சிறு துறைமுகங்கள், அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் மேம்படுத்தப்படும். இதனால் மாநிலத்தின் சரக்கு கையாளும் திறன் அதிகரிக்கும்' என்று கூறப்பட்டுள்ளது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக