உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 04, 2011

கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வி. அமுதவல்லி பொறுப்பேற்பு

கடலூர்:

              கடலூர் மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வெள்ளிக்கிழமை பொறுப்பு ஏற்ற வி. அமுதவல்லி, செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதில் அளிக்கையில், சொல்வதைவிட செயல்படுவதே சிறந்தது என்று குறிப்பிட்டார். 
                 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடலூர் மாவட்ட ஆட்சியராக இருந்த பெ. சீதாராமன் சுனாமி மறுவாழ்வுத் திட்ட இயக்குநராக மாற்றப்பட்டார். அவருக்குப் பதிலாக புதிய மாவட்ட ஆட்சியராக வி.அமுதவல்லி நியமிக்கப்பட்டு, வெள்ளிக்கிழமை பதவி ஏற்றார். மாவட்ட வருவாய் அதிகாரியிடம் இருந்து அவர் பொறுப்புகளைப் பெற்றுக் கொண்டார். 

 பின்னர் கடலூர் ஆட்சியர் அமுதவல்லி  கூறியது:  

                      அரசின் திட்டங்களை மக்களிடம் விரைவில் கொண்டு செல்வதே மாவட்ட ஆட்சியரின் பணி. அந்தப் பணியை சிறப்பாக செய்ய இருக்கிறேன். எனது செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் பத்திரிகைகளில் எழுதலாம், நேரில் தெரிவிக்கலாம். சம்பந்தப்பட்ட துறைகள் மூலம் தீர்வு காணப்படும். சொல்வதை விட செயல்படுவதே சிறந்தது.  கடலூர் பாதாளச் சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்றுவதில் ஏற்பட்டுள்ள காலதாமதத்துக்கு என்ன காரணம் தடைக்கல் என்ன என்று கண்டறிந்து, திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். 

              கடலூர் நகர போக்குவரத்து பிரச்னைகளுக்குத் தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.  அதைத் தொடர்ந்து அனைத்துத் துறை அதிகாரிகள் கூட்டத்தில் ஆட்சியர் கலந்து கொண்டு பேசினார். 


              புதிய ஆட்சியர் அமுதவல்லி மதுரை மாவட்டம் திருமங்கலத்தைச் சேர்ந்தவர். எம்.எஸ்.சி. (வேளாண்மை) எம்.ஏ. (பொருளாதாரம்), எம்.பி.ஏ. பட்டங்கள் பெற்றவர்.  1990- 91ல் கடலூர் வேளாண்துறையில் மண்ஆய்வு நிலையத்தில் வேளாண் அலுவலராகப் பணிபுரிந்தார். 1997-ல் டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு எழுதி துணை ஆட்சியர் ஆனார். 2003-ல் மாவட்ட வருவாய் அதிகாரியானார். 2007-ல் ஐ.ஏ.எஸ். அதிகாரியாகத் தேர்வு பெற்றார். கூட்டுறவுத் துறையில் கூடுதல் பதிவாளராக இருந்த அமுதவல்லி, கடலூர் மாவட்ட ஆட்சியராகப் பொறுப்பு ஏற்றுள்ளார். 









0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior