உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூன் 04, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் மாணவர்களுக்கு மேற்படிப்பு ஆலோசனைகள்

கடலூர்:
        
             கடலூர் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த, 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியருக்கு, அவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம்? என்பது குறித்த ஆலோசனைகள், அகதிகள் மறுவாழ்வுத் துறை மூலமாக வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.  

             தமிழகத்தில் 113 அகதிகள் முகாம்களில் வசிக்கும் மாணவ, மாணவியர் 1,010 பேர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதினர்.  இவர்களில் 87 சதவீதம் பேர் வெற்றி பெற்றனர். 165 பேர் 400-க்கும் அதிகமான மதிப்பெண்கள் பெற்றனர்.  

               கடலூர் மாவட்டத்தில் காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, குள்ளஞ்சாவடி அகதிகள் முகாம்களைச் சேர்ந்த 22 மாணவ, மாணவியர் 10-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றனர்.   மேற்கொண்டு அவர்கள் என்ன படிக்கலாம்? அரசு அவர்களுக்கு வழங்கும் சலுகைகள் என்ன? என்பது குறித்து ஆலோசனை வழங்கும் முகாம் கடலூரில் வெள்ளிக்கிழமை நடந்தது.  

              மாவட்ட அகதிகள் மறுவாழ்வுத் துறை இதற்கு ஏற்பாடு செய்து இருந்தது. ஈழ எய்திலீயர் மறுவாழ்வுக் கழகம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் இந்த ஆலோசனைகள் வழங்கப்பட்டன.  தொண்டு நிறுவனத்தின் நிர்வாகிகள் பத்மநாதன், சுரேஷ்குமார் ஆகியோர் மாணவ, மாணவியருக்கு ஆலோசனைகளை வழங்கினர்.  





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior