கடலூர்:
கடலூர் திருப்பாபுலியூரில் பிரசித்தி பெற்ற பாடலீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி திருவிழா மிக சிறப்பாக நடைபெறும்.

அதுபோல் இந்த ஆண்டு வைகாசி திருவிழா திங்கட்கிழமை காலை 6.30 மணியளவில் கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. 9 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலா நடைபெற்றது. இரவு 8 மணிக்கு இந்திர விமானத்தில் பஞ்சமூர்த்திகள் மற்றும் சேக்கிழார் வீதி உலா நடைபெறுகிறது.
தொடர்ந்து 13-ந் தேதி வரை காலை, மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலாவும், மண்டகப்படியும் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்த்திருவிழா வருகிற 14-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணிக்கு நடக்கிறது. தேர் திருவிழாவில் கடலூர் மற்றும் அதனை சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்கிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ஜெகநாதன், செயல் அலுவலர் மேனகா ஆகியோர் செய்து வருகிறார்கள்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக