உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




செவ்வாய், ஜூன் 07, 2011

இலவச தங்கத் தாலி திட்டம் தமிழகத்தில் தொடக்கம்

       ஏழைப் பெண்களுக்கு இலவச தங்கத் தாலி வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா நேற்று  தொடங்கி வைத்தார். இத்தகவல் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்

           25,000 ரூபாய் நிதி உதவியோடு, மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் (22 கேரட்) தங்கம் இலவசமாக வழங்கவும், இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகையை 25 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்குவதோடு மணப் பெண்ணின் திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்கம் இலவசமாக வழங்கவும் தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி முதல்வர் ஜெயலலிதா 16.5.2001 அன்று ஆணையிட்டார். 

               தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்தபடி  திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம்  செய்ய தங்கம் வழங்கும் திட்டத்தை இன்று   (6.6.2011)  தலைமைச் செயலகத்தில் தொடங்கி வைத்து, ஏழு ஏழைப் பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிதி உதவியுடன் திருமாங்கல்யம் செய்ய, நான்கு கிராம் (22 கேரட்) தங்க நாணயம் வழங்கி வாழ்த்தினார்.   

             இளம் பெண்கள் கல்வி கற்பதை ஊக்குவிப்பதற்காக, இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற பெண்களுக்கு திருமண உதவித் தொகை ஏற்கனவே வழங்கப்பட்ட ரூபாய் 25 ஆயிரத்தை, 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க ஆணையிட்டிருந்தார்.  அதன்படி,  இளநிலைப் பட்டம் அல்லது டிப்ளோமா பட்டயம் பெற்ற ஏழு பெண்களுக்கு, திருமண நிதி உதவியாக ரூபாய் 50,000/-க்கான காசோலையுடன்  திருமாங்கல்யம் செய்ய 4 கிராம் தங்க நாணயமும் வழங்கி வாழ்த்தினார். 

            முதல்வரிடமிருந்து திருமண நிதி உதவியுடன் திருமாங்கல்யம்  செய்ய தங்கமும் பெற்றுக் கொண்ட பெண்கள், முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கொண்டார்கள். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior