சிதம்பரம்:
புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆண்டுதோறும் ஆனி திருமஞ்சன திருவிழா 10 நாட்கள் நடக்கும். அதேபோல் இந்த ஆண்டிற்கான ஆனி திருமஞ்சன திருவிழா செவ்வாய்க் கிழமை கொடியேற்றத் துடன் தொடங்கியது. காலை 6 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் சிவ.சிதம்பரேஸ்வர தீட்சிதர் கோவில் கொடி மரத்தில் கொடியேற்றி வைத்தார்.
தொடர்ந்து நடராஜர், சிவகாமி அம்மாளுக்கு தீபாராதனை நடந்தது. அதன்பிறகு பஞ்சமூர்த்திகள் 4 முக்கிய வீதிகள் வழியாக வீதியுலா வந்தனர். இரவு 8 மணிக்கு மத்தள பூஜை நடக்கிறது. நாளை 29-ந் தேதி பஞ்சமூர்த்திகள் சந்திரபிறை வாகன காட்சியும், 30-ந் தேதி தங்க சூரிய பிறை வானக காட்சியும், அடுத்த மாதம் 1-ந் தேதி வெள்ளி பூத வாகன காட்சியும் ,2-ந் தேதி வெள்ளி ரிஷப வாகனத்தில் தெருவடைச்சான் காட்சியும், 3-ந்தேதி வெள்ளி யானை வாகன காட்சியும், 4-ந்தேதி தங்க கைலாச வாகன காட்சியும், 5-ந்தேதி தங்க ரதத்தில் பிஷாடனர் காட்சியும் நடைபெறுகிறது. வருகிற 6-ந் தேதி தேர்த்திருவிழா நடக்கிறது.
இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுப்பார்கள்.விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆனி திருமஞ்சன திருவிழா 7-ந் தேதி (வியாழக்கிழமை) நடக்கிறது. முன்னதாக சிவகாமசுந்தரி, நடராஜபெருமானுக்கு லட்சார்ச்சனை, ராஜ சபையில் மகாஅபிஷேகமும், திருவாபரண காட்சியும், பகல் 12 மணிக்கு பஞ்சமூர்த்திகள் வீதி உலாவும் நடக்கிறது. பின்னர் சிவகாமசுந்தரி, நடராஜபெருமான் ஆயிரங் கால் மண்டபத்தில் இருந்து எழுந்தருளி 3 முறை முன்னும்,பின்னுமாக நடனமாடி பக்தர்களுக்கு காட்சியளிப் பார்கள்.இதனையே ஆனி திருமஞ்சனம் என்பர்
.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக