உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




புதன், ஜூன் 29, 2011

கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் விழா

நெல்லிக்குப்பத்தில் : 

         கடலூர் மாவட்டத்தில் முதல் முறையாக தேசிய அடையாள அட்டை வழங்கும் பணியை கலெக்டர் துவக்கினார். இந்தியா முழுவதும் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தனித்தனியான எண் கொண்ட தேசிய அடையாள அட்டை வழங்கும் பணி நடந்து வருகிறது. கடலூர் மாவட்டத்தில் முதலாவதாக நெல்லிக்குப்பம் அடுத்த எழுமேடு ஊராட்சி முத்துகிருஷ்ணாபுரத்தில் தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணி துவங்கியது. விழாவில் ஆர்.டி.ஓ., முருகேசன், தாசில்தார் அனந்தராம், மக்கள் தொகை கணக்கெடுப்பு அலுவலர் கண்ணப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.

கலெக்டர் அமுதவல்லி பயனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை வழக்கும் பணிக்கான ஒப்புகை ரசீதை வழங்கி பேசியது: 

          மத்திய அரசு தேசிய அடையாள அட்டை (ஸ்மார்ட் கார்டு) வழங்கும் பணியை துவக்கியுள்ளது. ஐந்து வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தனி அடையாள எண் கொண்ட அட்டை வழங்கப்படுகிறது. இதில் அனைத்து விவரங்களும் அடங்கியிருக்கும். புகைப்படம், விழித்திரை, கைரேகைகள் அடங்கியிருப்பதால் ஆள் மாறாட்டம் செய்ய முடியாது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அடிப்படையில் அட்டை வழங்கப்படுகிறது. இதனை மக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.

 பள்ளியில் விழா நடத்த தடை வருமா?: 

             பெரும்பாலும் அரசு விழாக்கள் என்றாலே பள்ளிகளில்தான் நடத்தப்படுகிறது. இதனால் அன்று முழுவதும் மாணவர்கள் கல்வி பாதிக்கப்படுகிறது. இதுகுறித்து தினமலர் இதழில் பலமுறை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. ஆனால் அதிகாரிகள் தொடர்ந்து அரசு விழாக்களை பள்ளிகளிலேயே நடத்துகின்றனர். நேற்று முத்துகிருஷ்ணாபுரத்தில் நடந்த விழாவும் பள்ளியில்தான் நடந்தது. மேலும் அடையாள அட்டை வழங்கும் பணி குறைந்தது மூன்று நாட்களாவது நடக்கும் அந்த மூன்று நாட்களும் கல்வி பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. புதிய கலெக்டராவது பள்ளிகளில் விழாக்கள் நடத்துவதை தடை செய்ய வேண்டும்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior