பண்ருட்டி:
செல்போன் இ-சார்ஜ், ரீ சார்ஜ் நடவடிக்கைகளை நிறுத்தி வைப்பதென பண்ருட்டி செல்போன் வியாபாரிகள் நலச் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விற்பனையாளருக்கு வழங்கும் கமிஷன் தொகையை குறைக்கும் நடவடிக்கையை கண்டித்து அனைத்து செல்போனுக்கும் ஈ.சி., ரீ சார்ஜ், கூப்பன் மற்றும் ஆக்டிவேஷன் நிறுத்தப்படும் பண்ருட்டியில் நடைபெற்ற செல்போன் ரீ சார்ஜ் சில்லறை வியாபாரிகள் சங்க கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
பண்ருட்டி, திருக்கோயிலூர், விழுப்புரம், கடலூர், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி, வடலூர், விருத்தாசலம், பெண்ணாடம், புதுச்சேரி, மரக்காணம், திருச்சி, செய்யார், காஞ்சிபுரம் பகுதியில் நலச் சங்கம் ஏற்பட்டதுபோல, அனைவரின் ஒத்துழைப்புடன் மாநிலத்தின் பல பகுதியில் செல்போன் ரீ சார்ஜ் விற்பனையாளர்கள் நலச் சங்கத்தை தனித் தனியாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. பண்ருட்டி செல்போன் விற்பனையாளர்கள் நலச் சங்க தலைவர் என்.முருகதாஸ் தலைமை தாங்கினார். ஆர்.தம்பி சீனுவாசன் முன்னிலை வகித்தார். செயலர் கே.டி.பாலாஜி வரவேற்றார். கடலூர் சி.மோகன்ராஜ், விருத்தாசலம் ஸ்ரீதர், விழுப்புரம் சரவணன், திருக்கோயிலூர் குத்தூஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பூபத்குமார் நன்றி கூறினார்.
வாடிக்கையாளர்கள் அவதி:
பண்ருட்டி, சுற்றுப் பகுதியில் செல்போன் கடைகளில் இ.சி., மற்றும் ரீ சார்ஜ் கூப்பன்கள் விற்பனை செய்யப்படாததால் வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சில கடைகளில் இச் சூழ்நிலையை பயன்படுத்தி அதிக லாபம் வைத்து விற்கப்படுவதாக தெரியவருகிறது.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக