உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், ஜூன் 02, 2011

அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம்

கடலூர்:

             அடிப்படை வசதிகள் இன்றி சிதைந்துக் கிடக்கும் கடலூர் துறைமுக மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க வேண்டும் என்று, தமிழ்நாடு மீனவர் பேரவை கோரிக்கை விடுத்தது.

              தமிழ்நாடு மீனவர் பேரவையின் கடலூர் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கூட்டம் கடலூரில் திங்கள்கிழமை நடந்தது. ஆண்டுதோறும் கடல் நீரோட்டங்களால் தூர்ந்து கொண்டு இருக்கும் கடலூர் துறைமுகத்தை, மணல்வாரி கப்பல்கள் மூலம் தூர்வாரி ஆழப்படுத்த வேண்டும். ஆண்டுக்கு ரூ. 100 கோடிக்கு மேல் மீன் வர்த்தகம் நடைபெறும் கடலூர் துறைமுக மீன் இறங்குதளம், பராமரிப்பு இன்றிக் கிடக்கிறது.


             மீன் இறங்கு தளத்தைச் சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடலூர் துறைமுக நுழைவாயிலில் மின் விளக்குகள் பொருத்த வேண்டும். பரங்கிப்பேட்டை, அன்னங்கோயில் துறைமுகங்களையும் ஆழப்படுத்த வேண்டும். சோனங்குப்பம், சிங்காரத்தோப்பு, அக்கரை கோரி சுனாமி நகர் பகுதிகளில் இருந்து சுடுகாட்டுக்கு 6 கி.மீ. தூரம், சுற்றிக் கொண்டு செல்ல வேண்டியது இருப்பதால், பல சமூகப் பிரச்னைகள் ஏற்படுகின்றன. பல நேரங்களில் படகுகள் மூலமாகவும் சடலங்கள் எடுத்துச் செல்ல நேரிடுகிறது. 

               இப்பிரச்னைக்குத் தீர்வு காண, சுனாமி குடியிருப்புப் பகுதியில் உப்பனாற்றில் பாலம் அமைக்க வேண்டும். சுனாமிக் குடியிருப்புப் பகுதியில் இருந்து மாணவர்கள் சிரமமின்றி பள்ளிகளுக்குச் செல்ல, உப்பனாற்றில் சிறிய பாலம் அமைக்க வேண்டும். முழுமைப் பெறாமல் இருக்கும் சொத்திக்குப்பம்- கிள்ளை கடற்கரைச் சாலைப்பணியை நிறைவேற்ற வேண்டும்.÷தூர்ந்துக் கிடக்கும் கடலூர் துறைமுகம் கோரிவாய்க்காலை படகுகள் நிறுத்துவதற்கு வசதியாக ஆழப்படுத்த வேண்டும்.

              தியாகவல்லி பகுதியில் அமைக்கப்பட்டு வரும் தனியார் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் உள்ளூர் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவர் எம்.சுப்புராயன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் கே.சுப்புராயன் முன்னிலை வகித்தார். மாவட்டப் பொருளர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.




0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior