ஆடி மாதத்தில் 108 அம்மன் கோயில்களை தரிசிப்பதற்கான சிறப்பு ஆன்மிகச் சுற்றுலா வசதியை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் செய்துள்ளது.
ஜூலை 18-ம் தேதி இச்சுற்றுலா தொடங்கப்படுகிறது. திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் காலை 6 மணிக்கு தொடங்கி வெள்ளி மற்றும் திங்கள்கிழமை இரவு சென்னை வந்தடையும் வகையில் 108 அம்மன் கோயில் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
பெரியவர்களுக்கான கட்டணம் ரூ. 3,250 என்றும், குழந்தைகளுக்கு ரூ. 2,500 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து, தங்கும் வசதி, வழிகாட்டி சேவை ஆகியவை இக்கட்டணத்தில் அடங்கும்.இதுபோல், சென்னையைச் சுற்றியுள்ள அம்மன் கோயில்களுக்கும் ஒருநாள் ஆன்மிகச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கட்டணம் ரூ. 250.தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக