விருத்தாசலம்:
விருத்தாசலம் அரசு கலைக் கல்லூரி மாணவிகள் விடுதி கட்டுவதற்கான இடத்தை வருவாய்த் துறையினர் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர்.
விருத்தாசலம் திரு கொளஞ்சியப்பர் கலைக் கல்லூரியில் பயின்று வரும் பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி அமைப்பதற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. அதன்படி பிற்படுத்தப்பட்ட மாணவிகளுக்கான விடுதி கட்டுவது குறித்து வருவாய்த் துறையினர் ஆலோசித்து, கல்லூரி பின்புறமுள்ள கல்லூரிக்கு சொந்தமான இடத்தில் அமைப்பது பற்றி ஆய்வு செய்தனர். அப்போது விடுதிக்கு தேவையான பாதுகாப்பு வசதிகள் உள்ளதா? என்பது குறித்தும் ஆலோசித்தனர். வட்டாட்சியர் சரவணன், நகர காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கரன், வருவாய் ஆய்வாளர் பிரபாகரன், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) சுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன் உள்ளிட்டோர் இருந்தனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக