உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




சனி, ஜூலை 02, 2011

14வது நெய்வேலி புத்தகக் கண்காட்சித் தொடக்கம்

 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhJjRSL8MfAYCF5J9Yq4W2HQKfqmNigP8fqjCv7Acp8QDYJ6wVO_FAJt3DEiDKW2MqqhBRDEtj5Bs0LatUksRokMcTryMI5c5YRRUP3ttyKi5ePwsyo2ON_ViGjTA_BZoODLXpU4T29sQDZ/s320/NeyveliBookfair.png


நெய்வேலி : 

          ""இந்தியாவிற்கே ஒளியேற்றி வரும் என்.எல்.சி., நிறுவனம் புத்தகக் கண்காட்சி வாயிலாக அறிவு தீபத்தையும் ஏற்றி வருகிறது'' என சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் பேசினார். 

           என்.எல்.சி., சார்பில் நெய்வேலியில் நேற்று துவங்கிய 14வது புத்தகக் கண்காட்சியை சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து என்.எல்.சி., சேர்மன் அன்சாரி, புத்தக கண்காட்சி குழுத் தலைவரும் சுரங்க இயக்குனருமான சுரேந்தர் மோகன், இயக்குனர்கள், சரத்குமார் ஆச்சாரியா, கந்தசாமி, சேகர், மகிழ்செல்வன் ஆகியோருடன் அரங்குகளை பார்வையிட்டார்.

விழாவில் சேர்மன் அன்சாரி பேசுகையில், 

              "ஒவ்வொரு குடும்பத் தலைவியும் தனது குழந்தைகளை வெறும் படிப்பாளிகளாக மட்டுமல்லாமல், சிறந்த படைப்பாளிகளாகவும் உருவாக்க வேண்டும். விவேகானந்தர், நேரு போன்ற தலைவர்களின் சுயசரிதைகளை படிக்கச் செய்ய வேண்டும். புத்தகங்கள் படிப்பதன் வாயிலாக எதிர்கால சந்ததியினரை சிறந்த சமுதாயம் கொண்ட அமைப்பாக உருவாக்க முடியும்' என்றார்.


சென்னை ஐகோர்ட் நீதிபதி மதிவாணன் பேசியது: 

               இந்தியாவிற்கே ஒளி ஏற்றி வரும் என்.எல்.சி., இந்த புத்தகக் கண்காட்சி வாயிலாக அறிவு தீபத்தையும் ஏற்றி வருகிறது. இந்த காலத்தில் புத்தகம் படிக்க வேண்டும் என்ற எண்ணம் நமது சந்ததியினரிடையே குறைந்து கொண்டே செல்கிறது. அது மாற வேண்டும். "டிவி' பார்ப்பதிலும், கம்ப்யூட்டர் பயன்படுத்துவதிலுமே நேரத்தை வீணடிக்கக் கூடாது. பழைய நூல்களை பார்ப்பதே அரிதாக உள்ளது. இவற்றை பழைய புத்தகக் கடைகளில் மட்டுமே பார்க்கும் நிலை உள்ளது. இது மாற வேண்டும். கல்வியில் பாகுபாடு இருக்க கூடாது. கல்வி எல்லோருக்கும் பொதுவானது. இவ்வாறு நீதிபதி மதிவாணன் பேசினார்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior