உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஜூலை 30, 2011

திரிபுரா முதல்வர் மாணிக் சர்க்கார் சிதம்பரம் வருகை


சிதம்பரம்:

         சிதம்பரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய விவசாயிகள் சங்க பவள விழா வரும் ஞாயிற்றுக்கிழமை (31-ம் தேதி) நடைபெறுகிறது. கீழரத வீதியில் நடைபெறும் இவ் விழாவில் அன்று மாலை 4.30 மணிக்கு திரிபுரா மாநில முதல்வர் மாணிக் சர்க்கார் (படம்) பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார் .திரிபுரா முதல்வரின் வருகையை முன்னிட்டு சிதம்பரம் டி.எஸ்.பி. டி.கே.நடராஜன் தலைமையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

            டிஎஸ்பி டி.கே.நடராஜன், சட்டப் பேரவை உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் எம்.கண்ணபிரான், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலக்குழு உறுப்பினர் மூசா, நகரச் செயலாளர் ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்டோர் கீழரதவீதியில் மாநாட்டு மேடை அருகே ஆய்வு மேற்கொண்டனர். மேலும் திரிபுரா முதல்வர் தங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழக விருந்தினர் விடுதி, மாநாட்டு மேடைக்கு முதல்வர் வரும் சாலைகள் குறித்தும் போலீசார்   ஆய்வு மேற்கொண்டனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior