உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஜூலை 30, 2011

மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி மாணவி ஜி.பிரியங்கா தங்கம் வென்றார்

நெய்வேலி:

            சிவகாசியில் நடந்த மாநில அளவிலான தடகளப் போட்டியில் நெய்வேலி ஜவகர் சி.பி.எஸ்.இ. பள்ளி மாணவி ஜி.பிரியங்கா, டிரையத்லான் பிரிவில் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார். 

               மாநில தடகள சங்கமும், விருதுநகர் மாவட்ட தடகள சங்கமும் இணைந்து கடந்த 22 முதல் 24-ம் தேதிவரை மாநில அளவிலான தடகளப் போட்டியை சிவகாசியில் நடத்தியது. இதில் 14-வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் நெய்வேலி ஜவகர் பள்ளி 9-ம் வகுப்பு மாணவி ஜி.பிரியங்கா டிரையத்லான் பிரிவில் தங்கமும், 100 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளியும் வென்றார். இதேபள்ளியைச் சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவி எம்.தேவி நீளம் தாண்டுதலில் வெள்ளிப் பதக்கமும் வென்றார். 16-வயதுக்குள்பட்டோருக்கான பிரிவில் என்.எல்.சி. பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவி சி.டீனா 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றார். 

            மற்றொரு மாணவி எம்.கீதா நீளம் தாண்டுதலில் வெண்கலப் பதக்கம் வென்றார்.  இப் போட்டிகளில் பங்கேற்று பதக்கம் வென்ற மாணவிகளான ஜி.பிரியங்கா, எம்.தேவி மற்றும் சி.டீனா ஆகியோர் அடுத்தமாதம் 18-ம் தேதி முதல் 20ம் தேதிவரை  ஹைதராபாத்தில் நடக்கவுள்ள தென்னிந்திய ஜூனியர் தடகளப் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை பெற்றிருப்பதாக அணியின் மேலாளர் கிளையோபாஸ் தெரிவித்தார். 


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior