கடலூர்:
தாட்கோ மூலம் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த, 540 மாணவ மாணவியருக்கு இலவச தொழிற்பயிற்சி அளிக்கப்பட இருப்பதாக, மாவட்ட ஆட்சியர் வே. அமுதவல்லி திங்கள்கிழமை தெரிவித்தார்.
இதுகுறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மேற்கண்ட இலவச தொழிற்பயிற்சிகளை அளிக்க, கடலூர் மாவட்டத்துக்கு ரூ. 33.54 லட்சம் நிதியை அரசு ஒதுக்கி இருக்கிறது. கீழ்காணும் நிறுவனங்களில் இலவச பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்கான வயது வரம்பு 18 முதல் 35 வரை.
பயிற்சி அளிக்கும் நிறுவனங்கள்:
ஏ.சி.டி இன்டர்நேஷனல் இண்டஸ்ட்ரியல் ஸ்கூல் ஆப் ஐ.டி. டெக்னாலஜிஸ்,
சிதம்பரம். மல்டிமீடியா மற்றும் அனிமேஷன் பயிற்சி. 6 மாதம். கல்வித் தகுதி 12-ம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு.
ஸ்ரீ விருத்தாம்பிகை குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன்ஸ், விருத்தாசலம். எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், ஏ.சி. மெகானிக், ஃபுட் புரொடக் ஷன், ஃபுட் பெவரேஜ் சர்வீசஸ். 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வி.
கிரியேட்டிவ் மேனேஜ்மெண்ட் கன்சல்ட்ன்ஸி, கடலூர். ரீடெய்ல் மேனேஜ்மெண்ட் பயிற்சி. 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.
நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல். காட்டுமன்னார்கோயில். ஏ.சி. மெகானிக். 12 மாதம். 10-ம் வகுப்பு தேர்ச்சி.
ஸ்ரீ சரஸ்வதி இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல், வண்டிகேட் ,சிதம்பரம். ஏ.சி. மெகானிக், ஃபுட் புரொடக் ஷன். 12 மாதம். கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.
வள்ளலார் இன்ஸ்டிடியூட் ஆப் ஸ்கூல், வளையமாதேவி. ஏ.சி. மெகானிக், ஃபுட் புரொடக் ஷன். 12 மாதம். கல்வித் தகுதி 10ம் வகுப்பு தேர்ச்சி.
மகாலட்சுமி ஹோட்டல் மேனேஜ்மெண்ட் மற்றும் கேட்டரிங் இன்டஸ்ட்ரியல் ஸ்கூல், மஞ்சக்குப்பம், கடலூர். ஃபுட் புரொடக் ஷன், ஃபுட் பெவரேஜ் சர்வீசஸ். 12 மாதம். 10-ம் வகுப்பு தேர்ச்சி.
சி.எஸ்.சி. கம்ப்யூட்டர் எஜுக்கேஷன், திருப்பாப்புலியூர், கடலூர். டேலி இ.ஆர்.பி. 9. பயிற்சி காலம் 4 மாதம். 12-ம் வகுப்பு தேர்ச்சி.
மேற்கண்ட பயிற்சிகளில் சேர விரும்பும் மாணவ மாணவியர், சாதிச்சான்று, ஆண்டு வருமானச் சான்று (ரூ. 2 லட்சத்துக்குள்), ரேஷன் அட்டை, மாற்றுச் சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள் 2 ஆகியவற்றுடன்,
மேற்கண்ட நிறுவனம் அல்லது
கடலூர் மாவட்ட மேலாளர்,
தாட்கோவிடம் விண்ணப்பப் படிவங்களை இலவசமாகப் பெற்று, பூர்த்தி செய்து, 29-7-2011 மாலை 5 மணிக்குள், சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக் குறிப்பில் ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக