உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், ஆகஸ்ட் 01, 2011

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் திமுக ஆர்பாட்டம்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/4dcd6970-c11d-420b-9572-9da4900d7660_S_secvpf.gif
கடலூர்:

                 கடலூர் மாவட்ட தி.மு.க. வக்கீல்கள் அணி கூட்டம் கடலூரில் சனிக்கிழமை  நடந்தது. கூட்டத்துக்கு கடலூர் மாவட்ட தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.கே.பன்னீர் செல்வம் தலைமை தாங்கினார். வக்கீல் அணி அமைப்பாளர் சிவராஜ், வக்கீல்கள் பக்கிரி, சக்கரவர்த்தி, பாரி இப்ராகிம், ராதாகிருஷ்ணன், சக்திவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

                 மாவட்ட அவைத்தலைவரும், கடலூர் நகர்மன்ற தலைவருமான தங்கராசு, முன்னாள் தலைவர் ஏ.ஜி.ராஜேந்திரன், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜா, வக்கீல்கள் ராதா, அருணாச்சலம், கலியமூர்த்தி, ராம்சிங், ஏ.ஜி.ஆர்.சுந்தர், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், அருளப்பன் மற்றும் வக்கீல்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

அ.தி.மு.க. அரசின் அடக்குமுறையை கண்டித்து 1-ந்தேதி (நாளை) கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் வக்கீல்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

                 தி.மு.க.வினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை சட்டரீதியாக சந்திப்பது என்றும் இதுசம்பந்தமாக அந்தந்த நீதிமன்றங்களில் வக்கீல்கள் குழுக்கள் நியமித்து, கசட்டரீதியான பாதுகாப்பு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டது. தமிழக அரசு நடப்பு கல்வி ஆண்டிலேயே சமச்சீர் கல்வியை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior