உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், ஆகஸ்ட் 01, 2011

திட்டக்குடியில் பிறப்பு சான்றிதழ் வேண்டி கைக்குழந்தையுடன் அலையும் பெண்

 http://mmimages.mmnews.in/Articles/2011/Jul/f3eeeda8-2ef0-4e8b-b787-365fa9995c87_S_secvpf.gif
திட்டக்குடி:

                திட்டக்குடியில் அரசு அதிகாரிகளிடம் பிறப்பு சான்றிதழ் வேண்டிய ஒரு தாய் தனது கைக்குழந்தையுடன் அலையும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறையை அடுத்துள்ள தளவாய் கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன். இவரது மனைவி நவமணி. இவருக்கு கடந்த மே 7ம் தேதி திட்டக்குடி அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது.

                   பின்னர் பிறப்புச் சான்றிதழ் வேண்டி மருத்துவமனை கொடுத்து இருந்த ஆவணங்களுடன் திட்டக்குடி பேரூராட்சியில் விண்ணப்பித்தார். மருத்துவமனை நிர்வாகம் வழங்கிய சான்றிதழில் தந்தை பெயர் கிருஷ்ணன் என்பதை கிருஷ்ணமூர்த்தி எனவும், தாயார் பெயர் நவமணி என்பதை தவமணி எனவும் பூர்த்தி செய்து கொடுத்தாக தெரிகிறது. குழந்தையின் பெற்றொர் பேரூராட்சியில் சான்றிதழை கொடுத்து பிறப்பு சான்றிதழ் வேண்டி விண்ணப்பித்தனர்.

               பேரூராட்சி நிர்வாகத்தினர் சான்றிதழை சரிபார்க்கும் போது தவறாக இருந்ததால் வேறொரு சான்றிதழ் வாங்கி வரும்படி திருப்பி அனுப்பியுள்ளனர். மருத்துவமனைக்கு சென்று வேறு சான்றிதழ் கேட்ட பெற்றொரிடம் மருத்துவமனை அதிகாரிகள் நாங்கள் முதலில் கொடுத்த சான்றிதழை திருப்பி எடுத்து வாருங்கள் திருத்தித்தருகிறோம், ஒரே நபருக்கு இரண்டு சான்றிதழ்கள் வழங்க முடியாது என மறுத்து விட்டனர்.

                 பேரூராட்சி நிர்வாகமும் எங்களிடம் அளித்த சான்றிதழ்களை திருப்பித்தர இயலாது என தெரிவித்துள்ளனர். இதனால் மனவேதனையுடன் இரண்டு மாத காலங்களாக சான்றிதழுக்காக அந்த பெண் படாதபாடு பட்டு வருகிறார். இரு அரசு அலுவலகங்களில் பணியாளர்கள் குழந்தையுடன் ஒரு தாய் சான்றிதழ் வேண்டி அலையும் அவலநிலையை போக்க அரசு அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.






0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior