உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஆகஸ்ட் 06, 2011

கடலூரில் இருந்து ரேஷன் அரிசி கடத்தல்: ஒருவர் கைது

கடலூரில் இருந்து கடத்தப்பட்டு புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் கைப்பற்றப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.
கடலூர்:
         தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த, 145 டன் ரேஷன் அரிசியை தமிழகப் போலீசார்  வெள்ளிக்கிழமை கைப்பற்றினர்.  கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இருந்து, ரேஷன் அரிசி பெருமளவுக்குக் கடத்தப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் அரிசியை புதுவையைச் சேர்ந்த கள்ளத்தனமாக அரிசி வியாபாரம் செய்யும் நபர்கள் வாங்கி, அங்குள்ள அரிசி ஆலைகளில் நன்றாக பாலிஷ் செய்து, கேரளம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் விற்பனை செய்து விடுகின்றனர். 

            இந்த அரிசி சந்தையில் கிலோ ரூ. 15-க்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது.   அண்மையில் கடலூரில் இருந்து கடத்திச் செல்லப்பட்டு, புதுவை மாநிலம் பாகூரில் பதுக்கி வைத்து  இருந்த 48 டன் ரேஷன் அரிசியை கடலூர் மாவட்ட உணவு குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீசார்    கைப்பற்றினர். இக்கடத்தலில் தொடர்பு உள்ள பாகூர் அப்பு என்ற இதயத்துல்லா உள்ளிட்ட, 10-க்கும் மேற்பட்டவர்களைப் போலீஸôர் கைது செய்தனர்.  

           தொடர்ந்து போலீஸôர் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.  இந்நிலையில் புதுவை மாநிலம் சேலியமேடு கிராமத்தில் உள்ள அரிசி ஆலை சேமிப்புக் கிடங்கை வெள்ளிக்கிழமை கடலூர் மாவட்ட உணவு குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் துணைக் கண்காணிப்பாளர் ராஜேந்திரகுமார், ஆய்வாளர் முருகன், உதவி ஆய்வாளர் பாஸ்கரன், சிறப்புப் படை ஆய்வாளர் அம்பேத்கர் உள்ளிட்ட போலீஸôர் சோதனையிட்டனர்.  

          சோதனையில் அங்கு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 145 டன் ரேஷன் அரிசியை போலீசார் ரேஷன் கைப்பற்றினர்.  இந்த ரேஷன் அரிசி, விற்பனைக்குக் கொண்டு செல்லத் தயாராக வைக்கப்பட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது.  இது தொடர்பாக சேலியமேடு கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணனின் மகன் நந்தகோபனை (56) போலீசார் கைது செய்தனர். மேலும் பலரைப் போலீஸôர் தேடிவருகிறார்கள்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior