உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

சனி, ஆகஸ்ட் 06, 2011

விருத்தாசலம் கூட்டுறவு சங்கத்தில் நகைக் கடன் சேவை தொடக்கம்

கடலூர்:

            விருத்தாசலம் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் நகைக் கடன் சேவை வியாழக்கிழமை தொடங்கப்பட்டது.

இது குறித்து கடலூர் கூட்டுறவு இணைப் பதிவாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

             விருத்தாசலம் வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், முதல்முறையாக நகைக் கடன் வழங்கும் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இச்சேவையை கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் எஸ்.ஆர். வெங்கடேசன், குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இச்சங்கத்தின் மூலம் தினசரி நகைக் கடன் வழங்கப்படும். ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.5 லட்சம் வரை நகைக் கடன் வழங்கப்படும் என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

            பின்னர் விருத்தாசலம் கூட்டுறவு தொடக்க வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கியில் ரூ. 95 ஆயிரத்தில் உருவாக்கப்பட்ட, நவீன கெüண்ட்டரை இணைப் பதிவாளர் தொடங்கி வைத்தார்.நிகழ்ச்சிகளில், கடலூர் மாவட்ட மத்தியக் கூட்டுறவு வங்கி தனி அலுவலர் ந.மிருணாளினி, விருத்தாசலம் சரக துணைப் பதிவாளர் எஸ்.பார்த்திபன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior