கடலூர்:
பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்த மீனவ கிராமத்துக்கும், சாமியார்பேட்டை மீனவ கிராமத்துக்கும் இடையே நேற்று முன்தினம் மாலை மோதல் ஏற்பட்டது.

சாமியார்பேட்டையை சேர்ந்த 300-க்கும் மேற்பட்டோர் புதுப்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து வீடு மற்றும் கடைகளில் பொருட்களை அடித்து உடைத்து சூறையாடினார்கள். வாகனங்களின் கண்ணாடியையும் அடித்து உடைத்து நொறுக்கினார்கள்.
இந்த மோதல் தொடர்பாக பரங்கிப்பேட்டை போலீசார் சாமியார்பேட்டையை சேர்ந்த 300 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 6 பேரை கைது செய்தனர். சாமியார்பேட்டை ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் உள்பட மற்றவர்களை தேடி வருகிறார்கள்.
இதற்கிடையே சாமியார்பேட்டை மீனவ கிராமத்தை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று காலை லாரி, வேன்கள் மூலம் கடலூர் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். சாமியார்பேட்டை கிராமத்துக்குள் புகுந்து போலீசார் பெண்களை மிரட்டுவதாகவும், இதன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி கலெக்டரை சந்தித்து முறையிட வந்தனர். ஆனால் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை.
இதையடுத்து அப்பெண்கள் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர். இதைத்தொடர்ந்து போலீசார் 5 பெண்களை மட்டும் கலெக்டரை சந்திக்க செல்லுமாறு அறிவுறுத்தினர். அதன்படி கலெக்டரை சந்திக்க 5 பெண்கள் மட்டும் அலுவலகத்துக்கு சென்றனர். கலெக்டர் அலுவலகத்தை பெண்கள் முற்றுகையிட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக