உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, ஆகஸ்ட் 12, 2011

கடலூர் மாவட்டத்தில் 62 ஆயிரம் பேருக்கு தமிழக அரசின் உதவித்தொகை

 
கடலூர்:
 
                 தமிழக முதல்- அமைச்சராக ஜெயலலிதா பொறுப்பேற்றதும் முதல் 7 கோப்புகளில் கையெழுத்திட்டார் அதில் முதியோர் உதவித்தொகை ரூ.500-ல் இருந்து ரூ.1000 மாக உயர்த்தி வழங்கப்படும் கோப்பும் ஒன்று. இதன் மூலம் தமிழகம் முழுவதும் லட்சகணக்கான முதியவர்கள் பயன் பெற்று வருகிறார்கள்.

              கடலூர் மாவட்டத்தில் முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற விவசாயக் கூலி ஆகியோர் 62 ஆயிரத்து 100 பேர் மாதத்திற்கு தலா ரூ.1000 பெற்று பயன் அடைந்து வருகிறார்கள். இவர்களில் 16 ஆயிரத்து 527 பேர் ஆண்கள், 45 ஆயிரத்து 573 பேர் பெண்கள். மாதம் 1000 ரூபாய் கிடைப்பதால் முதியோர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டு உள்ளது. அவர்கள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவை மனதார பாராட்டுகின்றனர். 
 
கடலூர் மாவட்டம் பில்லாலி கிராமத்தில் வசித்து வரும் 75 வயதான பூங்காவனம் கூறியது:-

             இந்த தள்ளாத வயதில், தான் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் எனக்கு ஆதரவுதர யாரும் இல்லாத காரணத்தால் எனது வாழ்க்கையே பெரிய போராட்டமாக இருந்தது. தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்ததும் எங்களை போல் கஷ்டபடுகிறவர்கள் மனக்குறையை தீர்க்கிற மாதிரி மாதம் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார்.

முதல்-அமைச்சருக்கு நன்றி.

வரக்கால்பட்டு கிராமத்தில் 75 வயது முதியவர் நடேசன் கூறியது:-


             வயதானவர்களுக்கு 1000 ரூபாய் பென்சன் கொடுக்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு இருக்காங்க. ரூ.500 வாங்கினபோது வீட்டு செலவுக்கே போதாமல் இருந்தது. இனி எனக்கு வீட்டு செலவை பற்றி கவலை இல்லை இது மட்டுமின்றி இலவச அரிசி தருகிறார்கள். எங்களைபோல் வயதானவர்கள் கஷ்டத்தை போக்கிய முதல்- அமைச்சர் ஜெயலலிதா காலத்திற்கும் நன்றாக இருக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior