பண்ருட்டி:
சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு ஒரு கோடி மரக்கன்றுகளை நட ரூ. 62 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது என சிறப்புத் திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி. சம்பத் பேசினார்.
டால்மியா சிமென்ட் குழுமம், பண்ருட்டி அரசு மருத்துவமனை மற்றும் எக்ஸ்னோரா, சிவிக் எக்ஸ்னோரா சங்கம் இணைந்து எக்கோடச் மரக்கன்றுகள் நடும்விழா அரசு மருத்துவமனை வளாகத்தில் சனிக்கிழமை நடந்தது.
விழாவில் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்து அமைச்சர் எம்.சி. சம்பத் பேசியது:
காடு செழித்தால் தான் நாடு செழிக்கும், இன்றைய நிலையில் சுற்றுச்சூழலை பாதுகாக்க மரங்கள் அதிகம் தேவை. நாளுக்குநாள் விளைநிலங்கள் அழிக்கப்பட்டு கட்டிடங்களாகவும், தொழிற்சாலைகளாகவும் மாறி வருகிறது. மேலும் மக்கள் தொகை மற்றும் வாகனப் பெருக்கத்தால் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர், தூய்மையான காற்றும் அவசியம் என்றார்.
விழாவிற்கு ஊரக நலப்பணிகள் மற்றும் குடும்பநலன் இணை இயக்குநர் கடலூர் டாக்டர் எம்.மனோகரன் தலைமை தாங்கினார். எக்ஸ்னோரா இன்டர்நேஷனல் மாவட்ட தலைவர் ஆர்.எம்.பாலசுப்பிரமணியன், மத்திய அரசு வழக்கறிஞர் கே.கோபாலகிருஷ்ணன், எக்ஸ்னோரா சங்க இயக்குநர் இ.பழனி முன்னிலை வகித்தனர். அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் எம்.மலர்கொடி வரவேற்றார். சிவிக் எக்ஸ்னோரா தலைவர் டி.சி.பசுபதி, மாவட்ட வனத்துறை அலுவலர் ஏ.சுப்ரமணியன், சென்னை எக்ஸ்னோரா இண்டர்நேஷனல் துணைத் தலைவர் என்.வி.ரங்கநாயகலு, விதை சான்று உதவி இயக்குநர் பி.ஹரிதாஸ், மொழி மொழி அமைப்பாளர் பொன்வேந்தன், அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.சுப்ரமணியன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்.
மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலர் ஆதிசேஷன், எம்.ஜி.ஆர். மன்ற இளைஞரணிச் செயலர் பெருமாள் ராஜா, அண்ணா கிராம ஒன்றிய செயலர் வ. விபீஷணன், மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலர் எம்.எஸ். தாஜுதீன், நகர பேரவைச் செயலர் ஆர். செல்வம், நகரச் செயலர் ரவிச்சந்திரன், அவைத் தலைவர் ராஜதுரை கவுன்சிலர் கமலக்கண்ணன், வழக்கறிஞர் வடிவேலன், ஏழுமலை, ஆழ்வார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளி நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் எஸ். மோகன்குமார் தலைமையில் மாணவர்கள் மரக்கன்றுகள் நடுவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தனர். டாக்டர் டி. எழில் நன்றி கூறினார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக