உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 05, 2011

கடலூரில் அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு விநியோகம்

நெல்லிக்குப்பம்:
 
               கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வெள்ளிக்கிழமை  முதல் பெறப்பட்டு வருகிறது. அதற்கான விருப்பமனு வாங்கும் கடலூர் டவுன் ஹாலை அமைச்சர் எம்.சி.சம்பத், முன்னாள் எம்.எல்.ஏ. அய்யப்பன் ஆகியோர் நேற்று மாலை பார்வையிட்டார்.

இதன் அமைச்சர் எம்.சி. சம்பத்  கூறியது:-


               மக்களின் எண்ணங்களை புரிந்து தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா திட்டங்களை தொலை நோக்கு பார்வையில் செய்து வருகிறார். கல்வியில் புரட்சி, மாணவர்களுக்கு லேப்-டாப் கொடுப்பதன் மூலம் விஞ்ஞான புரட்சி, விவசாயிகளுக்கு பசுமை புரட்சி, மிக்சி கிரைண்டர் கொடுப்பதன் மூலம் அடுப்படியிலும் புரட்சி செய்தவர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா. 12 ஆயிரம் குடும்பங்களுக்கு கலப்பின ஜெர்சி பசு கொடுப்பதன் மூலம் வெண்மை புரட்சி ஏற்பட்டுள்ளது.

                குடும்பத்துக்கு 4 வெள்ளாடுகள் வீதம் ஒரு லட்சம் குடும்பங்களுக்கு கொடுக்க உள்ளோம். இதில் 30 சதவீதம் ஆதிதிராவிட மக்களுக்கு கொடுக்க இருக்கிறோம். இதன் மூலம் ஆதிதிராவிட மக்களுக்கு ஆதரவான அரசாகவும் இந்த அரசு திகழ்கிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் கடலூர் கிழக்கு மாவட்டத்தில் நூற்றுக்கு நூறு சதவீதும் வெற்றி பெற்றது போல், முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 100 நாள் சாதனையை உள்ளாட்சி தேர்தலில் நூற்றுக்கு நூறு சதவீதம் வெற்றி பெற்று முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் காலடியில் சமர்ப்பிப்போம்.  இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் கூறினார்.  அப்போது நகர செயலாளர் குமார் என்கிற குமரன், ஒன்றிய செயலாளர் பழனிச்சாமி மற்றும் பலர் உடன் இருந்தனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior