உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், செப்டம்பர் 05, 2011

கடலூர் ரெட்டிச்சாவடி அருகே சாலை விபத்து : இருவர் பலி

 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/4ebb58f3-94dc-47f1-99af-4382913878ec_S_secvpf.gif

கடலூர்:

               சிதம்பரம் லால்புரம் பெரிய தெருவை சேர்ந்தவர் அரசன் (வயது 61). இவர் கிராம உதவி அலுவலராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மகள் சாந்தி. இவர் இருதய நோயால் பாதிக்கப்பட்டு இருந்தார். அங்குள்ள டாக்டர்களிடம் காண்பித்தபோது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் சாந்திக்கு அறுவை சிகிச்சை செய்வதற்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு நேற்று  காலை காரில் சாந்தியை அழைத்து வந்தனர். காரில் அரசன், அவரது மனைவி ராசாயி (55), மகள் சாந்தி (38), மருமகன் செங்குட்டுவன் (45), மகன் இளையராஜா ஆகியோர் வந்தனர்.

                     காரை இளைய ராஜா ஓட்டிவந்தார்.  கார் புதுவையை அடுத்த ரெட்டிச்சாவடி அருகே பெரிய காட்டுப்பாளையம் என்ற இடத்தில் வந்தபோது சென்னையில் இருந்து தஞ்சாவூருக்கு பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி எதிர்பாராத விதமாக கார் மீது மோதியது.  இதில் சம்பவ இடத்திலேயே சாந்தி உடல்நசுங்கி இறந்துபோனார். படுகாயம் அடைந்த அரசன், ராசாயி, செங்குட்டுவன், இளைய ராஜா ஆகிய 4 பேரும் சிகிச் சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் வழியிலேயே அரசன் பரிதாபமாக இறந்து போனார்.

               மற்ற 3 பேரும் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து ரெட்டிச்சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior