உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், செப்டம்பர் 08, 2011

அமெரிக்காவின் ஹெச்-1பி விசாக்களில் இந்தியாவுக்கு மட்டும் 65 சதவீதம்

            அமெரிக்கா சார்பில் உலக அளவில் வழங்கப்படும் ஹெச்-1பி விசாக்களில் இந்தியாவுக்கு மட்டும் 65 சதவீதம் வழங்கப்படுகிறது என அமெரிக்க துணைத் தூதர் ஏ. ஜெனீஃபர் சின்டயர் கூறினார்.

சென்னையில் உள்ள அமெரிக்க துணைத் தூதராக ஆகஸ்ட் 3-ம் தேதி பொறுப்பேற்ற ஏ. ஜெனீஃபர் சின்டயர், புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அளித்த பேட்டி:

               வேலை மற்றும் உயர் கல்விக்காக அமெரிக்கா செல்லும் இந்தியர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது. கடந்த ஆண்டில் அமெரிக்கா செல்ல விசா கேட்டு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை 22 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2010-ல் 6 லட்சம் விண்ணப்பங்கள் தணிக்கை செய்யப்பட்டன. அமெரிக்காவில் பணிபுரிவதற்காக வழங்கப்படும் ஹெச்-1பி விசாக்களை பொறுத்தவரை உலக அளவில் இந்தியாவுக்குத்தான் அதிக அளவில் வழங்கப்படுகிறது. அதாவது இந்தியாவுக்கு மட்டும் 65 சதவீதம் வழங்கப்படுகிறது.

               அமெரிக்காவின் பொருளாதார மந்தநிலை, இந்த எண்ணிக்கையில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அதற்கான நடவடிக்கைகள் மற்றும் ஆலோசனைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.அமெரிக்காவில் இப்போது 1 லட்சம் இந்திய மாணவர்கள் படித்துக் கொண்டிருக்கின்றனர். மேலும் அதிக அளவில் இந்திய மாணவர்கள் அமெரிக்காவுக்கு வரவேண்டும் என்று விரும்புகிறோம். இதுபோல் அமெரிக்க மாணவர்கள் அதிக அளவில் இந்தியா வந்து படிப்பதற்கான நடவடிக்கைகளை அமெரிக்கா மேற்கொண்டு வருகிறது.

               இதன் ஒரு பகுதியாக வரும் அக்டோபர் மாதம் வெளிநாட்டு வர்த்தக சேவைகள் அமைப்பு சென்னையில் கல்வி இயக்கம் ஒன்றை நடத்த உள்ளது. இதில் 20 அமெரிக்க பல்கலைக்கழகங்களும், கல்லூரிகளும் பங்கேற்க உள்ளன .தமிழக முதல்வர் ஜெயலலிதாவுடனான சந்திப்பின்போது கல்வி மற்றும் வர்த்தகத்தில் அமெரிக்காவுடனான உறவை மேலும் வலுப்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. ஊழலுக்கு எதிராக அமைதியான முறையில் அண்ணா ஹசாரே குழுவினர் மேற்கொண்ட போராட்டம் பாராட்டுக்குரியது. ஏனெனில் நானும் ஜனநாயகத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளேன் என்றார் அவர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior