உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வியாழன், செப்டம்பர் 08, 2011

கடலூரில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டம்: நடிகர் விவேக் தொடங்கி வைத்தார்

கடலூர்:

             கடலூரில் 25 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை, நடிகர் விவேக் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.  

              முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் விருப்பப்படி தமிழ்நாட்டில் 10 லட்சம் மரக் கன்றுகள் நடும் திட்டம், பசுமைக் கலாம் திட்டம் என்ற பெயரில் நிறைவேற்றப்பட்டு வருகிறது. நடிகர் விவேக் இத்திட்டத்தை தமிழகம் முழுவதும் செயல்படுத்தி வருகிறார். 

        இதில் கடலூர் மாவட்டத்தில் 25 ஆயிரம் மரங்கள் நடத் திட்டமிடப்பட்டுள்ளன. கடலூர் கந்தசாமி நாயுடு பெண்கள் கல்லூரி, கம்மியம் பேட்டை புனித வளனார் மேல்நிலைப் பள்ளி, நியூமில்லேனியம் மெட்ரிக் பள்ளி, திருப்பாப்புலியூர் பாடலீஸ்வரர் மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட 8 கல்வி நிலையங்களில் நடிகர் விவேக் மரக்கன்றுகளை நட்டார். 

நடிகர் விவேக் மாணவர்களிடையே பேசியது: 

            வாகனங்கள் விடும் புகையாலும், குளிர் சாதனக் கருவிகளாலும் சுற்றுச்சூழல் பெருமளவில் மாசுபடுகிறது. இதனால் ஓúஸôன் படலத்தில் ஓட்டை விழுந்து விட்டது. சுற்றுச் சூழலை பாதுகாக்க நிறைய மரங்கள் நடவேண்டும். முன்னாள் குடியரசுத் தலைவர் கலாம் இந்தியா முழுவதும் ஒரு கோடி மரங்களையும், தமிழகத்தில் 10 லட்சம் மரங்களையும் நடவேண்டும் என்று கேட்டு கொண்டார்.  

            அதன்படி தமிழகத்தில் இதுவரை 6.5 லட்சம் மரங்கள் நடப்பட்டு விட்டன. டிசம்பர் மாத இறுதிக்குள் 10 லட்சம் மரங்கள் நடும் இப்பணி முடிவடைய வேண்டும். பொதுநல அமைப்புகள் இத்திட்டத்துக்கு உதவ முன்வர வேண்டும். கடலூர் மாவட்டத்தில் சுனாமி பாதிக்கப்பட்ட ஒரு கிராமத்தில், 10 லட்சமாவது மரம் நடப்பட வேண்டும். அக்கிராமத்தில் ஜனவரி மாதம் 26-ம் தேதி நடைபெறும் நிறைவு விழாவில் அப்துல் கலாம் பங்கேற்கிறார் என்றார் விவேக்.





0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior