உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

செவ்வாய், செப்டம்பர் 06, 2011

கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 திட்டங்களில் 430 வளர் இளம் பெண்களுக்குபயிற்சி

கடலூர்: 

          கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 திட்டங்களில் 430 வளர் இளம் பெண்கள் பயிற்சி பெற உள்ளனர் என கலெக்டர் அமுதவல்லி பேசினார்.

கடலூர் அரசு தொழிற் பயிற்சி நிலையத்தில் ராஜிவ் காந்தியின் வளர் இளம் பெண்கள் தன்னுரிமை மேம்பாட்டிற்கான தொழிற் பயிற்சியினை கலெக்டர் அமுதவல்லி தொடங்கி வைத்து பேசியது: 

              ராஜிவ் காந்தியின் வளர் இளம் பெண்களது தன்னுரிமை மேம்பாட்டிற்கான திட்டம் தமிழகத்தில் கடலூர், சேலம், திருவண்ணாமலை, ராமநாதபுரம், மதுரை, திருச்சி, கோயமுத்தூர், சென்னை மற்றும் கன்னியாகுமரி ஆகிய 9 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடலூர் மாவட்டத்தில் 11 முதல் 18 வயது முடிய 1 லட்சத்து 9 ஆயிரத்து 358 வளர் இளம் பெண்கள் உள்ளனர். 

              இத்திட்டம் ஒவ்வொரு கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையங்கள் மூலமாக செயல்படுத்தப்படுகிறது. 16 முதல் 18 வயது முடிய உள்ள பள்ளி செல்லா வளர் இளம் பெண்களுக்கு தொழிற் பயிற்சி அளித்தல் திட்டத்தின் கீழ் கம்ப்யூட்டர் பயிற்சி, அடிப்படை வீட்டு உபயோக மின் பயிற்சி மற்றும் எம்ராய்டரி ஆகியவை அரசு தொழிற் பயிற்சி மூலமாக பயிற்சி அளிக்கப்படும். இத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள 14 திட்டங்களில் 30 வளர் இளம் பெண்கள் வீதம் 430 வளர் இளம் பெண்கள் பயிற்சி பெற உள்ளனர். வளரும் இளம் பெண்கள் படிப்பை தொடர முடியவில்லை என்றாலும் வாழ்வில் உயர்வதற்கு பலவிதமான வாய்ப்புகள் உண்டு. இவ்வாறு கலெக்டர் அமுதவல்லி பேசினார்.


0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior