சிதம்பரம்:
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா மண்டபத்தில் ஆசிரியர் தின விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் தலைமை வகித்துப் பேசினார்.
விழாவில் துணைவேந்தர் டாக்டர் எம். ராமநாதன் பேசுகையில்
ஆசிரியர்கள் காலத்தின் மாற்றத்தினை உணர்ந்து தமது கல்வியறிவை வளர்த்துக் கொண்டு மாணவர்களுக்கு பாடம் புகட்ட வேண்டும் என்றார். கலைப்புல முதல்வர் டி.செல்வராஜ் வரவேற்றார். தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டுத்துறை பல்கலைக்கழக்கழக துணைவேந்தர் முனைவர் கே. வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று 2010-11 கல்வியாண்டில் சிறந்த பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருது மற்றும் சிறந்த ஆராய்ச்சியாளர் விருது ஆகியவற்றை வழங்கிப் பாராட்டினார்.
பதிவாளர் எம்.ரத்தினசபாபதி நன்றி கூறினார்.
நல்லாசிரியர் விருதுபெற்றவர்கள்:
டி.நமச்சிவாயம் (பொருளாதாரம்),
கே.வி.புகழேந்தி (உயிர்வேதியியல்),
ஓலிவா பெர்னாண்டோ (கடல்வாழ் உயிரியல்),
எஸ்.ராஜா (இந்திய மொழியியல்துறை),
டாக்டர் பி.கே.மன்னா (மருந்தியல்துறை),
ஏ.யோபு (உடற்கல்வித்துறை),
பி.கே.குமார் (இசைத்துறை),
என்.ராமநாதன் (வேளாண் நுண்தாவரவியல்),
டாக்டர் பி.வி.எஸ்.பிரசாத் (தோல்வியாதி பிரிவு),
டாக்டர் ஏ.தங்கவேல் (பலமருத்துவப் பிரிவு).
சிறந்த ஆராய்ச்சியாளர் விருது பெற்றவர்கள்:
ஜி.ரவி (பொருளாதாரம்),
ஆர்.பன்னீர்செல்வம் (தாவரவியல்),
டி.ராமநாதன் (கடல்வாழ் உயிரியல்),
வி.கீதா (மொழியியல்),
எஸ்.ராமநாதன் (உற்பத்தி பொறியியல்),
ஆர்.முத்துமாணிக்கம் (கல்வியியல்),
ஆர்.சந்திரா (இசைத்துறை),
வி.குருசேவ் (வேளாண் தாவரவியல்),
ஆர்.உமாராணி (மருந்தியல் துறை).
கல்வியியல் பேராசிரியர் பி.பத்மநாபனுக்கு டாக்டர் எம். ஆரம் அறக்கட்டளை விருதும்,
கடல்வாழ் உயிரியியல் துறை இணைப் பேராசிரியர் பி.சம்பத்குமாருக்கு எம்.ரத்தினசபாபதி அறக்கட்டளை விருதும்,
கடல்வாழ் உயிரியியல் துறை இணைப் பேராசிரியர் எஸ்.ஜெயலட்சுமிக்கு டாக்டர் டி.ஜே.பாண்டியன் விருதும் வழங்கப்பட்டது.
விழாவில் தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆர்.மீனாட்சுந்தரம், தொலைதூரக்கல்வி மைய இயக்குநர் முனைவர் எஸ்.பி.நாகேஸ்வரராவ், மக்கள்-தொடர்பு அதிகாரி எஸ்.செல்வம் மற்றும் புல முதல்வர்கள், பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக