உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




திங்கள், செப்டம்பர் 19, 2011

கடலூர் லாரன்ஸ் சாலையில் ரூ.7 கோடியே 30 லட்சம் மதிப்பில் ரெயில்வே சுரங்கப்பாதை திட்டம் - அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்தார்

 
 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/e4063542-2f96-4a2d-baa5-205a80dbaa38_S_secvpf.gif
 
கடலூர்:
 
              கடலூர் நகரின் மைய பகுதியாக லாரன்ஸ் சாலை உள்ளது. இதனால் எந்நேரமும் வாகன போக்குவரத்து, மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் இருந்து கொண்டு இருக்கும். மேலும் இப்பகுதியில் திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையம் உள்ளதால் ரெயில்கள் சென்று கொண்டிருக்கும். இதனால் லாரன்ஸ் சாலை முழுவதும் போக்குவரத்து பாதிப்பு இருப்பதோடு பொதுமக்கள் பெரும்பாதிப்பு அடைந்து வந்தனர்.
 
              இந்த நிலையில் சுரங்கப்பாதை அமைப்பதற்கு அரசு ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. நிதி போதாதால் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதைத்தொடர்ந்து சுரங்கப்பாதை அமைப்பதற்கு போதுமான நிதி ஒதுக்காததால் மீண்டும் இந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதற்கிடையே சுரங்கப்பாதை அமைக்கவில்லை என்றால் லாரன்ஸ் சாலையில் இரு பக்கமும் சுவர் எழுப்பப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்தது. இதனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடலூர் அனைத்து பொதுநல அமைப்புகளும், அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், முற்றுகை போராட்டம், மறியல் போராட்டம் என பல்வேறு கட்ட போராட்டம் நடைபெற்றது.
 
             இதன்பின்னர் ரெயில்வே சுரங்கப்பாதை அமைப்பதற்கு திருத்திய மதிப்பீடு தயாரிக்கப்பட்டு ரூ.7 கோடியே 30 லட்சம் நிதியை நெடுஞ்சாலைத்துறை ஒதுக்கீடு செய்தது. இந்த சூழ்நிலையில் தமிழக சட்டசபை தேர்தல் வந்தது. தேர்தல் பிரசாரத்துக்காக கடலூருக்கு வருகை தந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் கடலூர் லாரன்ஸ் சாலையின் குறுக்கே ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்படும் என உறுதி அளித்தார்.  அதன்படி கடலூர் தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் அமைச்சர் எம்.சி.சம்பத் போட்டியிட்டு வெற்றி பெற்றதோடு, தமிழ்நாட்டில் அ.தி.மு.க. ஆட்சி அமைத்தது. இந்த நிலையில் கடலூர் லாரன்ஸ் சாலையில் ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்திற்கு நேற்று பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.
 
              சுரங்கப்பாதை அமைக்கும் திட்டத்தின் பூமி பூஜையை சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். இதில் கலெக்டர் அமுதவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேந்திரன், நகராட்சி கமிஷனர் இளங்கோவன், செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி முத்தையா, உதவி செய்தி மக்கள் தொடர்பு அதிகாரி நல்லதம்பி, நகர செயலாளர் குமார், ஒன்றிய செயலாளர் பழனிசாமி, மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சேவல்குமார், விவசாய பிரிவு செயலாளர் காசிநாதன், மீனவர் பிரிவு செயலாளர் தங்கமணி, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி தலைவர் மாதவன்,
 
                 இணை செயலாளர் சி.கே.எஸ்.கார்த்திகேயன், ஒன்றிய பேரவை தலைவர் பாதிரிகுப்பம் சிவலிங்கம், நகர பேரவை செயலாளர் கந்தன், குறிஞ்சிப்பாடி பேரவை செயலாளர் வீரமணி, முன்னாள் ஒன்றிய செயலாளர் ஜெயச்சந்திரன், ஆதிபெருமாள், ஏழுமலை, தமிழ்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior