உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

திங்கள், செப்டம்பர் 19, 2011

அண்ணாமலை பல்கலைக்கழக இணைவேந்தர் எம்.ஏ.எம்.ராமசாமி சதாபிஷேக விழா

 
 http://mmimages.mmnews.in/Articles/2011/Sep/ff02e284-ab2b-4c36-ad8b-1e6b9d4bd488_S_secvpf.gif
 

 
             அண்ணாமலை பல்கலைக் கழக இணை வேந்தர் டாக்டர் எம்.ஏ. எம். ராமசாமிக்கு வயது 81. இதையொட்டி சென்னையில் நேற்று  அவருக்கு சதாபிஷேக விழா நடைபெற்றது.   ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள அவரது செட்டிநாடு இல்லம் விழாக் கோலமாக காட்சி அளித்தது. 
 
              200-க்கும் மேற்பட்ட சிவாச்சாரியர்கள் யாகம் வளர்த்து வேதமந்திரம் ஓதினார்கள். அதன் பிறகு எம்.ஏ.எம்.ராமசாமிக்கு சதாபிஷேக நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. விழாவில் மகன் எம்.ஏ.எம்.ஆர்.முத்தையா, உறவினர்கள் குமாரராணி மீனா முத்தையா, ஏ.சி. முத்தையா, எம்.ஏ.எம்.அண்ணாமலை, மத்திய மந்திரி ப.சிதம்பரம், ஆகியோர் குடும்பத்துடன் பங்கேற்றனர்.  வீட்டின் அருகே போடப்பட்டிருந்த மேடைக்கு எம்.ஏ.எம். ராமசாமி வந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்.   
 
             மத்திய மந்திரி ஜி.கே. வாசன், ஓய்வு பெற்ற நீதிபதிகள் ஏ.ஆர்.லட்சுமணன், கோகுலகிருஷ்ணன், தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின், மு.க.தமிழரசு, ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், தே.மு.தி.க. அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன். தினத்தந்தி அதிபர் டாக்டர் பா.சிவந்தி ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணிய ஆதித்தன், அண்ணாமலை பல்கலைக்கழக துணை வேந்தர் ராமநாதன், இந்து என்.ராம். இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த், முன்னாள் ஒலிம்பிக் ஹாக்கி கேப்டன் முனீர்சேட். பட அதிபர் ஏவி.எம்.சரவணன், நடிகர் விவேக், நடிகை குமாரி சச்சு, மற்றும் தொழில் அதிபர்கள், அரசியல் பிரமுகர்கள், நண்பர்கள், உறவினர்கள் வாழ்த்தினார்கள்.

            அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள், செட்டி நாடு சிமெண்ட் நிறுவன ஊழியர்கள் உள்பட ஏராளமானவர்கள் எம்.ஏ.எம். ராமசாமியின் காலில் விழுந்து ஆசி பெற்றனர். ஆயிரக்கணக்கில் பொது மக்கள் திரண்டு வந்ததால் கூட்டம் நிரம்பி வழிந்தது.
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior