உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

வியாழன், செப்டம்பர் 22, 2011

உள்ளாட்சித் தேர்தல்: கடலூர் மாவட்டத்தில் தயார் நிலையில் ஓட்டுப்பெட்டிகள்

கடலூர்:

          உள்ளாட்சித் தேர்தலையொட்டி கடலூர் மாவட்டத்திற்குத் தேவையான ஓட்டுப் பெட்டிகள் மதுரை மாவட்டத்தில் இருந்து கொண்டு வரப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புக்கான தேர்தல் விரைவில் அறிவிப்பு வெளியாக உள்ளது. நகராட்சி, மாநகராட்சி பதவிகளுக்கான தேர்தலில் மின்னணு இயந்திரங்கள் பயன்படுத்தப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

               மற்ற பதவிகளுக்கான தேர்தல் சாதாரணமாக ஓட்டுச் சீட்டின் மூலம் ஓட்டுப்பதிவு செய்து பெட்டியில் போடப்படும். அதற்காக கடலூர் மாவட்டத்தில் 1,500 ஓட்டுப்பெட்டிகள் மட்டும் இருப்பு இருந்தது. இந்நிலையில் மதுரையில் இருந்து 5,000 ஓட்டுப்பெட்டிகள் கடலூர் மாவட்டத்திற்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டன. அவற்றில் முதல் கட்டமாக 2,000 ஓட்டுப்பெட்டிகள் மதுரையில் இருந்து மாவட்டத்திற்கு வந்திறங்கியுள்ளன.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior