கடலூர்:
கடந்த சட்டசபை தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மரியம்பிச்சை வெற்றி பெற்று அமைச்சராக பொறுப்பேற்றார். சென்னைக்கு காரில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அதையடுத்து திருச்சி மேற்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் அடுத்தமாதம் 13-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. நேற்று முன்தினம் வேட்பு மனுதாக்கல் தொடங்கியது.
இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளராக போட்டியிடும் பரஞ்ஜோதி நேற்று மனுதாக்கல் செய்தார். தி.மு.க. சார்பில் ஏற்கனவே அந்த தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த முன்னாள் அமைச்சர் நேரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். நேரு நில அபகரிப்பு வழக்கில் கைதாகி கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கே.என்.நேருவின் வக்கீல்கள் ரமேஷ், பாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை கடலூர் ஜெயிலுக்கு சென்றனர். சிறை அதிகாரிகள் அனுமதி பெற்று திருச்சி மேற்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் கே.என்.நேருவிடம் கையெழுத்து பெற்று சென்றனர்.

0 கருத்துகள்:
கருத்துரையிடுக