உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்




வெள்ளி, அக்டோபர் 14, 2011

கடலூர் மாவட்டத்தில் 13 ஒன்றியங்களுக்கு ஓட்டு சீட்டுகள் அனுப்பும் பணி தொடக்கம்


 http://mmimages.mmnews.in/Articles/2011/Oct/d61ea8bd-b6a6-4d87-8bc2-43f8e729292c_S_secvpf.gif
 
விருத்தாசலம்:
            
          கடலூர் மாவட்டத்தில் உள்ளாட்சி மன்றங்களில் உள்ள 5 ஆயிரத்து 784 பதவிகளை பிடிக்க 20 ஆயிரத்து 533 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். இவர்களின் வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க வருகிற 17, 19 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் 16 லட்சத்து 15 ஆயிரத்து 476 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இவர்கள் வாக்களிப்பதற்காக 3 ஆயிரத்து 377 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

                  மேலும், மாவட்டத்தில் உள்ள 13 ஒன்றியங்களில் பதட்டமான வாக்குசாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதில் கிராமப்புற வாக்காளர்கள் (11 லட்சம்பேர்), மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர், கிராம பஞ்சாயத்து தலைவர், பஞ்சாயத்து உறுப்பினர் ஆகிய 4 பதவிகளுக்குரியவர்களை தேர்ந்து எடுக்க வேண்டியிருப்பதால் அவர்கள் ஒவ்வொருவரும் 4 ஓட்டுகளை போட வேண்டியுள்ளதால் 4 வண்ணங்களில் சுமார் 50 லட்சம் வாக்குச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டுள்ளன.

              இந்த ஓட்டுச்சீட்டுகள் அனைத்தும் விருத்தாச்சலம் அரசு கிட்டங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், நேற்று விருத்தாசலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுந்தரம், சுலோச்சனா ஆகியோர் மேற்பார்வையில் ஓட்டுசீட்டுக்கள் அனுப்பு பணிகள் தொடங்கியது.

              விருத்தாசலத்திலிருந்து கடலூர், குறிஞ்சிப்பாடி, அண்ணாகிராமம், பண்ருட்டி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம், குமராட்சி, காட்டு மன்னார் கோவில், கம்மாபுரம், விருத்தாசலம், நல்லூர், மங்களூர் ஆகிய 13 ஒன்றியங்களுக்கு அனுப்பட்டு வருகிறது. இதில், ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் ஒன்றியங்களுக்கு தேவையான ஓட்டு சீட்டுகள் மற்றும் தடவாள பொருட்கள் ஒப்படைக்கபடுகிறது.

           மினி லாரி மூலம் போலீஸ் பாதுகாப்புடன் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களுக்கு ஓட்டு சீட்டுக்கள் அனுப்பி வைக்கப்படுகிறது. விருத்தாசலம் அரசு கிட்டங்கியில் ஓட்டுசீட்டுகள் இருப்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.    
 
 
 
 
 
 
 
 
 

0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior