உங்கள் கருத்துக்களை இங்கே

இன்றைய செய்திகள்:

கடலூர் மாவட்ட செய்திகள்
வெள்ளி, அக்டோபர் 14, 2011

கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி

கடலூர்:

           உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு கடலூரில் வாக்காளர் விழிப்புணர்வுப் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. 

               பொதுமக்கள் அச்சம் இன்றி வாக்களிக்கவும், தவறாமல் தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவும் வேண்டுகோள் விடுக்கும் வகையில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது. தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டு இருக்கும் வாக்காளர்களுக்கான கடமைகள் குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு பேரணியில் பங்கேற்ற மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். 

            கடலூர் நகராட்சி அலுவலகம் அருகே புறப்பட்ட பேரணியை மாவட்ட ஆட்சியர் வே.அமுதவல்லி கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.அமுதவல்லி, நகராட்சி ஆணையர் மா.இளங்கோவன், மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர் பொ.முத்தையா, நாட்டு நலப்பணித் திட்ட மாவட்டத் தொடர்பாளர் திருமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.0 கருத்துகள்:

நண்பர்களோடு பகிர்ந்து கொள்ள

Country wise Vistior